tamilnadu

img

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் உலகளவில் இந்தியா முதலிடம் 

இந்தியாவில் உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உலகளவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களாக 37,80,107 ஆக பதிவு செய்துள்ளது. இதனால் பிரேசிலை இந்தியா முந்தியுள்ளது. உலக அளவில் 19,625,959 பேர் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து குணமடைந்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள மொத்த கொரோனா தொற்றுகளின்  எண்ணிக்கை 29,006,033 ஆகும். உலகளவில் பதிவான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 9,24,105 ஆகும்.

உலக அளவில் கொரோனா அறிக்கைகளை தொகுத்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையிலான அடிப்படையில் இந்தியாவை முதலிடத்தில் 37,80,107 ஆகவும்,இரண்டாவது இடத்தில் பிரேசில் 37,23,206 பேர்களும், மூன்றாவது  இடத்தில் அமெரிக்கா 24,51,406 பேர்கள் குணமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.    

மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவின் மீட்பு விகிதம் 78 சதவிகிதத்தை அடைந்துள்ளது. இது நாளுக்கு நாள் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை பிரதிபலிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 77,512 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது.  

தொற்றில் இருந்து குணமடைந்தவர்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்திரபிரதேசம் மற்றும் தமிநாடு ஆகியவை 60 சதவிகிதத்தை பதிவுசெய்துள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை  9,86,598 ஆக உள்ளது.