tamilnadu

புதுவையில் மார்ச் 31 வரை ஊரடங்கு: முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி, மார்ச். 21- புதுச்சேரியில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கு என்று முதல்வர் நாராயண சாமி கூறினார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி,“ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 22) தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், மது பானக் கடைகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் இயங்காது என்றும் பொது மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டோர் கண்டிப்பாக வெளியே வரக்கூடாது என்றும் தெரிவித்தார். மார்ச் 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை புதுச் சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். காய கறி, பால் உள்ளிட்ட அத்தி யாவசிய பொருட்கள் வாங்கு பவர்கள் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையி லும், மாலை 6 மணியில் இருந்து இரவு 7வரைக்குள் கடைகளில் வாங்கி கொள்ள லாம். கொரோனா நோய் தக்கம் தற்போது இந்தியா வில் வேகமாக தெரிகிறது. தமிழகத்தில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு அதிக அளவில் வாகனங்கள் வருகிறது. வரும் 31ஆம் தேதி வரை வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிழக்கு கடற்கரை சாலை எல்லையில் வெளிநாட்ட வர்களை கண்காணித்து உரிய பரிசோதனை செய்யப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் நாராயணாமி தெரிவித்தார்.
‘வாட்ஸ் ஆப்’ வசதி
பொதுமக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை தெரிவிக்க முதல்வர், அமைச்சர்களை சந்திக்க சட்டமன்றத்திற்கு வருகை தருகிறார்கள். இதனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பொது மக்கள் உடல் நலன் கருதி, தங்களின் குறைகள், கோரிக்கைகளை 93453 75069 என்கிற தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலமாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். இந்த ஏற்பாடு வரும் 31 ஆம் தேதி வரையில் தொடரும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் 31ம் தேதி வரை கூட்டமாக சேராமல், விலகியிருந்து, கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.

;