சிறு, குறு தொழில்களுக்கான அவசர கால கடன் வசதியை மார்ச் வரை நீட்டிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களும், இறப்புகள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 11 மாநிலங்களுக்கு வட்டி இல்லாத கடனாக 3 ஆயிரத்து 621 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வருமான வரி ரீபண்டாக 1.32 லட்சம் கோடி ரூபாய், 39.7 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநில மின் நிறுவனங்களுக்கு 1.18 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரோஜார் புரோட்ஷகான் யோஜனா திட்டத்தில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 899 நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு கேடியே 21 லட்சத்து 69 ஆயிரத்து 960 பேருக்கு 8 ஆயிரத்து 300 கோடி வரவு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில்களுக்கான அவசர கால கடன் வசதியை மார்ச் வரை நீடிக்கப்பட்டுள்ளது என கூறினார்.