tamilnadu

முதியோர், விதவை பென்ஷனை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் புதுவை அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

புதுச்சேரி, ஜூன் 14- முதியோர், விதவை பென்  ஷனை காலம் கடத்தாமல் உரிய நேரத்தில் வழங்க  வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம்  வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று  பரவாமல் தடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட தால் மக்கள் அந்த பாதிப்பி லிருந்து இன்னும் மீள வில்லை. தற்போது தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை உரு வாக்கியுள்ளது. ஊரடங்கு  தளர்வு செய்யப்பட்டபோதி லும் சேவைத்துறை சார்ந்த  தொழிலாளர்கள், முறை சாரா தொழிலாளர்கள், விவ சாயிகள் என பெரும்பகுதி  உழைக்கும் மக்கள் வேலை யின்றி வருமானமின்றி தவித்து வருகின்றனர். பட்டினியில் இருந்தும், நோய் அச்சத்தில் இருந்தும் மக்களை பாதுகாக்க வேண் டியது மத்திய, மாநில அரசு களின் கடமையாகும். ஏழை  எளிய மக்களுக்கு உணவும்,  நிதியும் வழங்கிட முன்வர  வேண்டுமென இத்தரு ணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இந்நிலையில் புதுவை மாநிலத்தில் முதியோர்கள், விதவைகள், திருமணம் ஆகாத பெண்கள், ஆதர வற்ற திருநங்கைகள் என ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர்  அரசின் பென்ஷன் திட்டத்தில்  பயனாளிகளாக உள்ளனர். இந்த பென்ஷன் தொகை யால் அந்தக் குடும்பங்க ளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்தது. ஆனால் கடந்த மாதத்திற்கான பென்ஷன் தொகை இதுவரை வழங்கப் படவில்லை. இதனால் பென்  ஷன் பயனாளிகளின் குடும் பங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே இந்த பேரிடர் காலத்தில் பென்ஷனர்களுக்கு உரிய நேரத்தில் பென்ஷன் தொகை கிடைத்தால் பேருத வியாக இருக்கும். எனவே மாநில அரசு எந்த  தடையும் இல்லாமல் முதி யோர்கள் மற்றும் விதவை பெண்களுக்கு போர்க்கால அடிப்படையில் பென்ஷன் வழங்க வேண்டும். மாநில துணை நிலை ஆளுநர் முதி யோர், விதவைகள் பென்ஷ னுக்கு விதிகளை காட்டி முட்டுக்கட்டை போடாமல் பென்ஷன் வழங்க ஆட்சி யாளர்களோடு ஒருங்கி ணைந்து செயல்பட வேண் டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;