tamilnadu

img

தட்டாஞ்சாவடியில் திமுக வெற்றி

புதுச்சேரி, மே 23-புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றார்.புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற என்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் ஆனந்து சொத்துக் குவிப்பு வழக்கில் தண் டனை பெற்றதால் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். இதனால் அத்தொகுதிக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.தட்டாஞ்சாவடி தொகுதி ரங்கசாமியின் கோட்டை என்று கூறப்பட்டது. இதனால் திமுக அங்கு அதிக பணத்தை செலவழிக்கக் கூடிய வேட்பாளரை களம் இறக்க திட்டமிட்டு தொழில் அதிபர் வெங்கடேசனை களம் இறக்கியது. இவரும் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டுமின்றி வாக் காளர்களுக்கு பணம் கொடுப்பதிலும் அதிகளவு பணம் செலவழித்தார். இதன் காரணமாக திமுகவினர் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியினரும் அவர் வெற்றி பெற தீவிரமாக உழைத்தனர். அதற்கான பலன் கிடைத்தது. திமுக வேட்பாளர் கே.வெங்கடேசன் 10,906 வாக்குகள் பெற்று வெற்றி 1,577 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியனை தோற்கடித்தார். என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் 9,367 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இத்தொகுதியில் மொத்தம் 22,332 வாக்குகள் பதிவானது. மற்ற கட்சிகள் அனைத்தும் டெபாசிட்டை இழந்தது. இத்தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வசம் இருந் தது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக பெற்றுள்ள வெற்றி பெற்றதின் மூலம் புதுச்சேரி திமுக சட்டமன்ற உறுப்பினர் பலம் 3 ஆக உயர்ந்துள்ளது.ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரம் மாற்றி எண்ணிவிட்டதாக தெரிவித்து என்.ஆர்.காங்கிரசார் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் முடிவுகள் அறிவிப்பது காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் மாலை 4.30மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக வேட்பாளர் வெங்கடேசன், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியனை விட 1, 577 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றார்.