tamilnadu

img

கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் பாராட்டு!

புதுச்சேரி,ஏப்.19-மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் புதுச்சேரி வேட்பாளர் களின் வெற்றிக்காக பாடுபட்ட கட்சித் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள காங்கிரஸ் புதுச்சேரி பிரதேச தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-புதுச்சேரி மக்களவை தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தது மகிழ்ச்சியை தருகிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.கடந்த ஒரு மாத காலமாக கண் துஞ்சாது, அல்லும் பகலும் அயராது பாடுபட்ட முதல்வர், அமைச் சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள், அணிகளின் தலைவர்கள் திமுக தெற்கு, வடக்கு, காரைக் கால் மாவட்ட அமைப்பாளர் கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன்முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக முற்போக்கு இயக்கங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தேர்தலை அமைதியான முறையில் நடத்தி கொடுத்த அரசு அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், ஊடக நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றியைதெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

;