tamilnadu

img

சுடுகாட்டிற்கு பாதையில்லாத மக்கள் நூதன போராட்டம்

புதுச்சேரி, செப். 12- புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன் பகுதிக்குட்பட்ட சோரியாங்குப்பம், குருவி நத்தம், இருளன் சந்தை ஆகிய கிராம மக்கள் தென்  பெண்னை ஆற்று கரையோ ரம் உள்ள சுடுகாட்டை நீண்ட  காலமாக பயன்படுத்தி வரு கின்றனர். இச்சுடுகாட்டிற்கு செல்ல வேண்டுமானால் ஆற்றின் கரையோரமாகத் தான் செல்லவேண்டும். கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு பெய்த கன மழையால் அந்த  சாலையும், கான்கிரீட் பால மும் அடித்து செல்லப் பட்டது. அந்த பாலத்தையும்,  குண்டும் குழியுமாக மாறிய  சாலையும் சீரமைத்து கொடுக்க வேண்டும், மயா னத்தை சுற்றி மதில் சுவரை யும் கட்டித்தரவேண்டும் என்று நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. கிராம நிர்வாக அலுவ லர் அலுவலகம் எதிரில் நடை பெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குருவிநத்தம், சோரியாங்குப்பம் கிளைச்  செயலாளர்கள் சாம்ப சிவம், வெங்கடாசலம் ஆகி யோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலாளர் ஆர். ராஜாங் கம், கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். பிரதேசக் குழு உறுப்பினர்கள் சரவ ணன், ராமமூர்த்தி, கலியன், இளவரசி மற்றும் கொம்யூன் குழு உறுப்பினர்கள் முத்து லிங்கம் சண்முகம், குண செல்வி, வளர்மதி மற்றும் ராமசாமி கலியபெருமாள் பத்மநாபன், வடிவேல், ஜீவா  குப்புசாமி, சக்திவேல், சிவப்பிரகாசம்,செல்வராஜி உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக, தாரை தப்பட்டை, ஒப்பாரியுடன் சவப் பாடை ஊர்வலம் நடத்தினர்.