tamilnadu

img

4வது கட்ட மக்களவை தேர்தல்

புதுதில்லி:

இந்திய நாடாளுமன்ற தேர்தல், பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. முதல் 3 கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில் திங்கட்கிழமை 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்றது.


இந்த தேர்தலில் 12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். 961 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை இந்த வாக்காளர்கள் 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்து தீர்மானித்தனர்.திங்களன்று தேர்தலை சந்தித்த பீகாரின் 5, ஜார்கண்டின் 3, மத்தியப் பிரதேசத்தின் 6, மராட்டியத்தின் 17, ஒடிசாவின் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் தலா 13, மேற்கு வங்கத்தின் 8, காஷ்மீரின் 1 (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும்) தொகுதிகளில் மாநில போலீஸ் படையினரும், மத்திய துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 


பதற்றமான இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலசட்டசபை தேர்தலில் 42 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி, 4வது கட்டதேர்தலில் 9 மாநிலங்களில் 72 நாடாளுமன்ற தொகுதிகளில் 50.6 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.பீகார் 44.33%, ஜம்மு மற்றும் காஷ்மீர் 9.37%, ஜார்கண்ட் 57.13%, மத்தியப் பிரதேசம் 57.77%, மகாராஷ்டிரா 42.52%, ஒடிசா 53.61%, ராஜஸ்தான் 54.75%, உத்தரப் பிரதேசம் 45.08%, மேற்கு வங்கம் 66.46% வாக்குகள் பதிவாகியிருந்தன.

;