புதுச்சேரி,அக்.17- புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-a புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் வரு கிற 19 ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம், பரிசுகள் கொடுப்பதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேர் தல் ஆணையம் எடுத்து வருகிறது. மாநில எல்லைகளில் காவல்துறையினர் தீவிர சோத னைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப் பட்டு வருகின்றன. ரோந்து பணியிலும் காவ லர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சட்டம்- ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்கவும், தேர்தலை அமைதியாக நடத்தவும் மாவட்ட ஆட்சித் துறை நடுவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதி காரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட பகுதி களில் வாக்குப்பதிவு முடியும் வரை குற்ற நடைமுறை சட்டம் 1973, பிரிவு 144(2)ன்கீழ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 19 ஆம் தேதி மாலை 5 மணிமுதல் வாக்குப்பதிவு முடியும் வரை 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடங்களில், தெருக்களில் கூடுவதும் கூடாது. பேனர்கள், விளம்பர தட்டிகள், பதா கைகள் வைப்பதற்கும் மற்றும் ஏந்தி செல்வ தற்கும், கோஷங்கள் எழுப்புவதற்கும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை செய்வதற்கும், வாக்குப்பதிவினை பாதிக்கக் கூடிய எந்த செயலையும் செய்வ தற்கும் முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி வித்திருக்கிறார்.