tamilnadu

புதுச்சேரியிலும் +2 மதிப்பெண் பட்டியல் வெளியீடு....

புதுச்சேரி:
புதுவை மாநில 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் தமிழ்நாட்டை ஒட்டியே இருப்பதால் தமிழக பாடத் திட்டத்தோடு ஒரே நேரத்தில் அரசு பொதுத் தேர்வுகள் நடத்தப் பட்டு முடிவுகள் வெளியிடப்படுகிறது.இதன்படி, புதுவை மாநிலத்தில் புதுச் சேரி மற்றும் காரைக்கால் பகுதி மாணவர்களுக்கான 12 வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் உள்ள 127 பள்ளிகளிலிருந்து 12,353 மாணவர்களுக்கும், காரைக்கால் மாவட்டத்தில் 23 பள்ளிகளிலிருந்து 2,321 மாணவர்களுக்கும் என மொத்தம் 14 ஆயிரத்து 674 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியாகி உள்ளன.

மதிப்பெண் பட்டியலை, இணைய தளங்கள் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம், மாணவர்களுக்கான செல்பேசியிலும் குறுந்தகவல் வரும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.கொரோனா காரணமாக நடப்பாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு நடக்காததால், கடந்த பத்தாம் வகுப்பில்(50 விழுக்காடு), பதினோராம் வகுப்பில் (20 விழுக்காடு), 12ஆம் வகுப்பில் (30 விழுக்காடு) எடுத்த சராசரி மதிப்பெண்கள் அடிப்படையில், கணக்கிடப் பட்டு மதிப்பெண் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.பொதுப் பிரிவில் 3,49,449 மாணவர்களும், 4,15,144 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தொழிற்பாடப் பிரிவில், 31,051 மாணவர்களும் 20,829 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் பாடப் பிரிவு வாரியாக மதிப் பெண் பெற்ற மாணவர்கள்: மொத்தம் 600 மதிப்பெண்களுக்குத் தேர்வு முடிவுகள் கணக்கிடப்பட்ட நிலையில், 551  வரை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விகிதம் 4.86 ஆகும். இதில், 12,374 பேர் மாணவர்கள், 27,305 பேர் மாணவிகள் என மொத்தம் 39,679 பேர் 550-க்கும் மேல் மதிப் பெண் பெற்றுள்ளனர்.அறிவியல் பாடப்பிரிவில் 6.6 சதவீதம் மாணவர்களும், வணிகப் பாடப்பிரிவில் 3.12 சதவீதம் மாணவர்களும், கலை பாடப்பிரிவில் 0.23 சதவீதம் மாணவர்களும், தொழிற் பாடப்பிரிவில் 0.26 சதவீதம் மாணவர்களும் 550-க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.அதேபோல 551- 600 வரை மதிப்பெண் கள் பெற்ற மாணவர்களின் விகிதம் 4.86 ஆகும். இதில், 12,374 பேர் மாணவர்கள், 27,305 பேர் மாணவிகள் என மொத்தம் 39,679 பேர் 550-க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.அறிவியல் பாடப்பிரிவில் 30,600 மாணவர்கள் 600க்கு 551 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேபோல், வணிகவியல் பாடப்பிரிவில் 8,909 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு 551 மதிப்பெண் எடுத்துள்ளனர். தொழிற்கல்வி பாடப்பிரிவில் 136 மாணவர்கள் 551 மதிப்பெண்களும், கலைப்பிரிவில் 35 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

;