புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் நடைபெற்ற சட்ட மன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வைத்தியலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான காமராஜ் நகர் தொகுதிக்கு கடந்த 21ந்தேதி வாக்கு பதிவு நடந்தது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில், தொடக்க சுற்றில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை பெற்றார்.இதைத்தொடர்ந்து நடந்த வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜான்குமார் 14,782 வாக்குகளும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் புவனேஸ்வரன் 7,611 வாக்குகளும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் புவனேஸ்வரனை விட 7,171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.