tamilnadu

img

பாஜக சதி: புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்தது

பாஜகவின் சதியைத் தொடர்ந்து புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது
புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஒரு திமுக எம்எல்ஏ ஆகியோரை பாஜக விலைக்கு வாங்கியதன் அடிப்படையில்  பதவியை ராஜினாமா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆளும் கட்சியின் பெரும்பான்மை 12 ஆகக் குறைந்தது.  எதிர்க்கட்சியினர் தரப்பில் 14 எம்எல்ஏக்களின் பலம் இருந்தது. இதையடுத்து எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை ஏற்று, புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு பிப்ரவரி 22க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார்
இந்நிலையில் இன்று காலை புதுவை சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டம் 10 மணிக்குக் கூடியது. அப்போது, பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசினார். சபாநாயகர் நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்  என்று அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் மீது வாக்களிக்காமல் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் வெளியேறினர். இதனால், முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததை அடுத்து, முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இருந்து வெளியே வந்த முதல்வர் நாராயணசாமி துணை நிலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். 
 

;