tamilnadu

img

நிவாரணத்திற்கு வழி சொல்லாத பிரதமர்: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி, ஏப்.13- புதுவையில் கூட்டத்தை தவிர்க்க விழாக்களை ரத்து செய்யுங்கள் என்று  அனைத்து மதத்தினருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என்று நாராயணசாமி கூறி யுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த திருச்சியில் முதல் அமைச்சர் நாராயணசாமி,”வருகிற 14 ஆம் தேதிக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். இதில் 90 சதவீதத்தினர் வருகிற  30 ஆம் தேதி வரை ஊரடங்களை நீட்டிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்” என்றார்.

ஊரடங்கு காரணமாக தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு மாநி லங்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என விடுத்த கோரிக்கைக்கு பிரதமர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

ஏப். 14 ஆம் தேதிக்கு பிறகு மேற்கொள்ள  வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்ச ரவை கூட்டத்தில் ஆலொசிக்கப்பட்டது. இதில் புதுவையை ஒட்டி தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்கள் உள்ளது. எனவே  நாம் தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது.  தமிழகத்தில் வருகிற 30 ஆம் தேதி வரை ஊர டங்கை நீட்டிக்க மருத்துவக் குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். இதுகுறித்தும் ஆலோ சித்தோம். மத்திய அரசும் சில விதிமுறை களை தருவதாக கூறியுள்ளது. அமைச்சரவை  முடிவு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் இன்று முதல்வர் தெரிவித்தார். தற்போது விழாக்காலம் என்பதால் விழாக்களை ரத்து செய்து, மக்கள் அதிகம்  கூடுவதை தவிர்க்க வேண்டும் என அனைத்து  மதத்தினருக்கும் அறிவுறுத்திருப்பதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

;