tamilnadu

சிபிஎம் வேண்டுகோளை ஏற்று குடும்ப அட்டை கணக்கெடுப்பு பணி நிறுத்தம்

புதுச்சேரி, ஜூலை 30- சிபிஎம் வேண்டுகோளை ஏற்று குடும்ப அட்டை கணக்கெடுப்பு பணியை நிறுத்த புதுச்சேரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் உள்நோக்கத்தோடு சிகப்பு ரேஷன் அட்டை  வைத்திருக்க கூடியவர்களை முறைப்படுத்து வதற்காக  கணக்கெடுப்பு நடத்துவது என்றும்,  இந்த பணியில் 200க்கும் மேற்பட்ட அமைச்சக  ஊழியர்களை ஈடுபட செய்ய  முடிவு செய்தி ருப்பதும் பொருத்தமற்ற நடவடிக்கையாகும். அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை கணக்கில் கொள்ளாமல் தாங்கள் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முதல்வர், அமைச்சர் ஆகியோ ருக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: குடும்ப அட்டை கணக்கெடுப்பு செய்வ தற்காக அரசு ஊழியர்களுக்கு பயிற்சியும், அதனைத் தொடர்ந்து களப்பணியும் வழங்க  குடிமைப்பொருள் வழங்கல் துறை நடவ டிக்கை எடுத்து வருவதாக அரசு ஊழியர்கள்  சங்கங்கள், பொதுமக்கள் எனது கவ னத்திற்கு கொண்டு வந்தனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை யில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும்  இந்த வேளையில் இப்பணியினை மேற்கொள்  வது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால் இப்பணியினை உடனடியாக நிறுத்தும்படி தலைமைச் செயலர், குடி மைப்பொருள் வழங்கல் துறைச் செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நிறுத்த உத்த ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;