உதகமண்டலம்,மார்ச் 10- காந்தல் காவல் நிலையத்தில் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு, அதனால் கால்கள் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் என்பவரை பாதுகாத்திட வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:
நீலகிரி மாவட்டம் உதகைக்கு அருகில் மேல் தலையாட்டு மந்து கிராமத்தில் வசித்து வரும் சுரேஷ் என்பவரை உதகை காந்தல் நிலைய போலீசார் ஒரு வழக்கு குறித்து விசாரிப்பதற்காக 09-08-2022 அன்று அதிகாலை அழைத்து சென்றுள்ளனர். அன்று காந்தல் காவல் நிலையத்தில் போலீசார் சுரேஷை கடுமையாக அடித்துள்ளனர். இரும்பு பைப்பால் காலில் கடுமையாக தாக்கியதாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் 01-11-2021 அன்று மனைவி ஜெயசுதா மனு கொடுத்துள்ளார். 01-03-2022 அன்று நீதி கேட்டும் மருத்துவமனையில் இருக் கும் அவரது கணவரை பாதுகாத்திட கோரியும் மனு கொடுத்துள்ளார். 01-11-2021 அன்று மாவட்ட ஆட்சி யருக்கும் மனு கொடுத்துள்ளார். காந்தல்காவல்துறையினர் சுரேசை காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கி யதில் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இன்று வரை தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வருமானம் இன்றி மாற்றுத்திறனாளியான அவரது துணைவி யார் ஜெயசுதாவும் அவரது இரண்டு பெண் குழந்தைகளும் வறுமையில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சுரேஷ் குடும்பத்தை மிரட்டி வருவதாக சுரேஷ் மனைவி ஜெயசுதா கூறுகிறார். சுரேஷ் குடும்பம் பட்டியல் இன சமூகத்தை சார்ந்த ஏழை கூலித்தொழிலாளி ஆவார். காவல் துறையினரால் தாக்கப்பட்டு கடுமையாக பாதித்து இன்று வரை சிகிச்சையில் உள்ள சுரேஷ் குடும்பத்தை பாதுகாத்திட , தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷை அரசு மருத்துவமனையில் சேர்த்து அரசு செலவில் உயர்ந்த சிகிச்சை அளித்து அவரை பாதுகாத்திட வேண்டும்.
சுரேஷை காவல்நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கிய காந்தல் காவல்நிலைய போலீசார் சஸ்பென்ட் செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். மாற்றுத் திறனாளியான சுரேஷ் மனைவி ஜெய சுதாவிற்கு அரசு வேலை வழங்கிடவேண்டும். சுரேஷின் இரண்டு பெண் குழந்தைகளின் கல்விச்செலவை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். சுரேசின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். ஜெயசுதா மற்றும் அவரது குழந்தைகளுக்கு பாது காப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.