tamilnadu

img

இந்த நாட்டின் ராஜாவாகவே தன்னைக் கருதிக் கொண்டார் மோடி.... புதுச்சேரி பரப்புரைக் கூட்டத்தில் ராகுல் காந்தி சாடல்...

புதுச்சேரி:
இந்த நாட்டின் ராஜாவாகவே தன்னைக் கருதிக் கொண்டார் மோடி என புதுச்சேரி பரப்புரைக் கூட்டத்தில் ராகுல் காந்தி சாடினார்.

புதனன்று புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்  தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பங்கேற்று பேசியதாவது:

புதுச்சேரி மக்களின் கலாச்சாரம், பண்பாடு, உரிமையை காங்கிரஸ் கட்சி எந்நாளும் பாதுகாக்கும். என்னைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிப்பதில்லை.மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட புதுச்சேரி அரசை கடந்த5 ஆண்டுகளாக செயல்படவிட வில்லை.தேசத்தின் பிரதமராக இருக்கும் மோடி, புதுச்சேரி மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளவில்லை. புதுச்சேரி யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை. அப்படி நினைத்தால் விரைவில் ஏமாற்றம் அடைவார்கள்.நரேந்திர மோடி என்னநினைக்கிறாரோ அதையே இந்திய மக்கள் அனைவரும் நினைக்க வேண்டும் என நினைக்கிறார்.இந்த நாட்டின் பிரதமராக அல்ல இந்த நாட்டின் ராஜாவாகவே கருதிக் கொள்கிறார். நரேந்திர மோடி. தமிழகத்தில் தமிழ் பேசக் கூடாது என்கிறார்கள்.மத்திய அரசை விமர்சித்தால் தேச விரோதி, தீவிரவாதி என்கிறார்கள்.நரேந்திர மோடி மனதில் என்ன உதிக்கிறதோ, அது தான் அனைவரது மனதிலும் உதிக்க வேண்டும்.கடந்த 6 ஆண்டுகளாக மோடி செய்த அனைத்துமே பணக்காரர்களுக்கு மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.  

முன்னதாக புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, அரசியலில் எனக்கு அதிகம் நண்பர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் என்னை நண்பர்களாக கருதாவிட்டாலும் அவர்களும் எனக்கு நண்பர்கள்தான். இந்தியாவில் பல மக்கள் செல்வத்தை தரும் கடவுளாக லட்சுமியை வழிபடும் நிலையில், இங்குள்ள பல பெண்கள் ஏன் பொருளாதாரரீதியாக சுதந்திரமாக  இல்லை என்றும் ராகுல் கேள்வி எழுப்பினார். ‘என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது. ஆனால், அவரை கொன்றவர்கள் மீது எனக்கு எந்த கோபமும், வெறுப்பும் இல்லை. அவர்களை மன்னித்துவிட்டேன் என்று தெரிவித்தார். 

;