tamilnadu

img

உடல்தானம் செய்வோரின் வாரிசுக்கு மத்திய அரசு வேலையில் முன்னுரிமை.... தமிழக அரசு பரிந்துரை

புதுக்கோட்டை:
உடல் உறுப்பு தானம் செய்யும் கொடையாளர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள் ளார்.

உடல் உறுப்பு தானம் செய்வதில் தொடர்ந்து 6-வது முறையாக தமிழகம் முதலிடம் பெற்றமைக்காக மத்திய சுகாதார துறையின் சார்பில் விருது அறிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற காணொலி காட்சிமூலமாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் பெற்று மத்திய அரசிடம்விருது பெற்றுள்ளது. இதற்கு முதுகெலும்பாக இருக்கும் கொடையாளர்களுக்கு இவ்விருதை காணிக்கையாக்குகிறேன். நடப்பாண்டில் 1392 கொடையாளர்களிடமிருந்து 8245உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள் ளது. கோவிட் காலத்திலும் 107 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, 184 சிறுநீரக அறுவை சிகிச்சை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப் பட்டுள்ளது.எளிய முறையில் உடல் உறுப்பு தானம் செய்ய ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானத்திற்காகவே ஏர் ஆம்புலன்ஸ் சேவையை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். உடல்உறுப்பு தானம் செய்யும் கொடையாளர் களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை மற்றும் தமிழக முதலமைச்சரின் சார்பில் பரிந்துரை செய்யப பட்டுள்ளது என தெரிவித்தார்.

;