tamilnadu

img

மாணவர்களை கவர்ந்திழுத்த புதுக்கோட்டை புத்தகத் திருவிழா

புதுக்கோட்டை, பிப்.17- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நான்கா வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வாசகர்கள், பொதுமக்கள் மட்டுமல்லாது பெருமளவிலான மாணவர் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா. ஞாயிறுக்கிழமை நடை பெற்ற மாலை நிகழ்விற்கு மருத்துவர் பி.தனசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான், மருத்து வர் அனிதா தனசேகரன், செ. சுந்தரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, ஏ. சந்திரபோஸ், சபா ரெத்தினம் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர்.விழாவில் பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் நா.அருள்முருகன் எழுதிய ‘நேமிநாதம் காலத்தின் பிரதி’ என்ற நூலை பேராசிரியர் பா.மதிவாணன் வெளியிட, அருட்பா சரவணன் பெற்றுக்கொண்டார். புதுக் கோட்டை மண்ணில் பிறந்து ஓயியத்துறையில் மிகப் பெரிய சாதனை படைத்த மாருதி புத்தககத் திரு விழாவில் கவுரவிக்கப் பட்டார்.
விஞ்ஞானியுடன் மாணவர்கள் உரையாடல்
வழக்கம் போல திங்கள் கிழமையன்றும் காலை வேளையில் அதிக அளவி லான பள்ளி, கல்லூரி மாண வர்கள் கலந்துகொண்டனர். மாணவர்கள் புத்தக அரங்குகளைப் பார்வை யிட்டு தங்களுக்குத் தேவை யான புத்தகங்களை தேடிச்தேடி வாங்கினர். விண்வெளி அதிசயத்தை விளக்கும் கோளரங்கம், தமிழனின் தொன்மையை விளக்கும் கீழடி அரங்கு களையும் பார்வையிட்டு அதிசயித்தனர். சிறப்பு நிகழ்வாக மாணவ, மாணவி களுடன் உரையடிய இந்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு எளிமையா கவும், சுவாரஸ்யமாகவும் பதிலளித்தார்.
சாதனையாளர்களுக்கு பாராட்டு
மாலையில் நடைபெற்ற விழாவிற்கு உணவக உரி மையாளர் சங்கத் தலைவர் சண்முகபழனியப்பன் தலைமை வகித்தார். எம். எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார் வரவேற்றார். எம்.ஏ.பி.ஜெயபால் முன்னிலை வகித்தார். நாசா செல்லும் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் பள்ளி மாணவி க.ஜெயலெட் சுமி, புதிய அறிவியல் சாத னைக்காக புதுக்கோட்டை தூய மரியன்னை மேல் நிலைப்பள்ளி இளம் விஞ் ஞானிகள் ஜெ.ஹரீஸ்ராஜ், எஸ்.நாகராஜ், ‘தமிழ் இலக்கியத்தில் கணிதம்’ என்னும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரைப் போட்டி யில் மாநில அளவில் முதலி டம் பெற்று சாதனை படைத்த அரையப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் வீ. கவியரசு ஆகியோரைப் பாராட்டி இந்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன், அறி வியல் பலகையின் ஒருங் கிணைப்பாளர் ஸ்ரீகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். கவிஞர் ஆர்.எம்.கதிரே சன், பாவலர் பொன்.கருப் பையா, கவிஞர் வெள்ளைச் சாமி, சேது கார்த்திக்கேயன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ரெ.தவச்செல்வம் நன்றி கூறினார்.  நிகழ்வில் சந்தைப் பேட்டை நகராட்சி நடு நிலைப்பள்ளி, செவ்வாய்ப் பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி, புதுக் கோட்டை புத்தாஸ் வீரக் கலைகள் கழக மாணவர்க ளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

;