புதுக்கோட்டை, பிப்.9- புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்க ப்பட்டன. இதுகுறித்து போட்டி ஒருங்கி ணைப்பாளர்கள் கு.ம.திருப்பதி, மகா.சுந்தர், மா.குமரேசன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: கீழ்நிலை வகுப்புகளுக்கான பேச்சுப் போட்டியில் துளையனூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி பிரியசகி, மணமேல்குடி அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளி மாணவர் சீ.ராஜாஸ்ரீ, குளத்தூர் முத்துசாமி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர் ஆ.ராமநாதன் ஆகியோர் முறையே மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். பாட்டுப் போட்டியில் ஒத்தைப்புளிக் குடியிருப்பு பள்ளி மாணவர் ஆ.செம்பு லிங்கம், மௌண்ட்சியோன் மெட்ரி க்பள்ளி மாணவி மு.மீனாள், ம.வெ.அஷிகா, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ர.சுபிக்ஷா ஆகியோர் முதல் மூன்று இடங்க ளில் வெற்றி பெற்றுள்ளனர். நூலறிவுப் போட்டியில் துளையனூர் பள்ளி மாணவி லெ.விஷ்ணுப்பிரியா, மணவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவரி வெ.ஜெகதீஸ்வரி, சந்தை ப்பேட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ச.ஆசிகாபர்வீன் ஆகியோ ரும், ஓவியப் போட்டியில் நச்சாந்து ப்பட்டி இராமநாதன் செட்டியார் மேல்நி லைப்பள்ளி மாணவி ம.நாககௌரி, புதுக்கோட்டை இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி மு.நேத்ரா, நார்த்தாமலை பிஎஸ்கே மெட்ரிக் பள்ளி க.வைஷ்ணவி ஆகியோரும் கவிதைப் போட்டியில் கீரனூர் மகளில் மேல்நிலை ப்பள்ளி மாணவிகள் ரா.தரணி, பா.பிர பாவதி, மௌண்டசியோன் மெட்ரி க்பள்ளி மாணவி ம.ருத்ரவேல் ஆகியோ ரும் வெற்றி பெற்றுள்னர். மேல்நிலைப் பிரிவுக்கான பேச்சுப் போட்டியில் மணவிடுதி உயர்நிலை ப்பள்ளி மாணவி வை.அபிநயா, இரா ணியார் பள்ளி மாணவி க.புவனா, மௌ ண்சியோன் பள்ளி மாணவி சி.அஸ்வின் அண்ணா, பாட்டுப்போட்டியில் மௌ ண்ட்சியோன் பள்ளி மாணவி நா.தாரணி, இராணியார் பள்ளி மாணவி பா.சுபானு, மூன்றாடமிடத்தை ஆ.அபூர்வா, ந.நஜ மாஹெஸீன் ஆகியோர் பெற்றுள்ளனர். நூலறிவுப் போட்டியில் மணவிடுதி பள்ளி மாணவி ர.அபிநயா, சந்தை ப்பேட்டை மகளிர் பள்ளி மாணவி மு.ஷாலினி, குளத்தூர் முத்துசுவாமி வித்யாலயா பள்ளி மாணவி இ.க. ரூபாஸ்ரீ ஆகியோரும் வெற்றி பெற்றுள்ள னர். ஓவியப் போட்டியில் சந்தைப்பே ட்டை மகளிர் பள்ளி மாணவி வி.கீர்த்த னா, நச்சாந்துப்பட்டி இராமநாதன் செட்டி யால் பள்ளி மாணவி வி.அகிலா, மௌ ண்ட்சீயோன் பள்ளி மாணவி க.பவித்ரா பானு, கவிதைப் போட்டியில் திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவி ரா.அபிநயா, இராணியார் பள்ளி மாணவி ஸ்ரீ.நித்யஸ்ரீ, சந்தைப்பேட்டை மகளிர் பள்ளி மாணவி வெ.கண்மணி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்க ளுக்கு பிப்ரவரி 20 அன்று நடைபெறும் புத்தகத் திருவிழாவில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் அறி விக்கப்பட்டுள்ளது.