tamilnadu

சீர்காழி, புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

கீழ்மாத்தூர்- குமாரக்குடி சாலையை மேம்படுத்தக் கோரிக்கை

சீர்காழி, டிச.12- கொள்ளிடம் அருகே கீழ்மாத் தூர் கிராமத்திலிருந்து குமாரக் குடி செல்லும் சாலையை மேம் படுத்த கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளி டம் அருகே கீழ்மாத்தூர் கிரா மத்திலிருந்து குமாரக்குடி வழி யாக கொண்டல் கிராமத்துக்குச் செல்லும் சாலை 500 மீட்டர் தூரத்துக்கு பழுதடைந்து மிகவும் மோசமாகியுள்ளதால் கீழ்மாத் தூரிலிருந்து குமாரக்குடி வழி யாக கொண்டலில் உள்ள பள்ளி மற்றும் மருத்துவமனைக்குச் செல்ல மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடை கின்றனர். இந்த சாலை 10 ஆண்டு களுக்கு முன்பு கருங்கல் சாலை யாக மாற்றப்பட்டது. ஆனால் தார் சாலையாக மாற்றவில்லை. இத னால் சாலையில் உள்ள கருங்கல் ஜல்லிகள் பூமிக்குள் புதைந்து வாய்க்கால் போன்று காட்சிய ளிக்கிறது. மழை பெய்யும் போ தெல்லாம், சாலையில் தேங்கும்  மழை நீர் வடிவதற்கு ஒரு வாரத்திற்கு மேலாகிறது.  கீழமாத்தூர் மற்றும் குமா ரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்க ளுக்கு முக்கிய போக்குவரத்து க்கு பயன்பாடாக உள்ள இந்த சாலையில் செல்லும் போதெல் லாம் மிகுந்த அவதியடைந்து வரு கின்றனர்.  எனவே பழுதடைந்த கீழ்மாத்தூர் -குமாரக்குடி சாலை யை மேம்படுத்த உடன் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் உணவுத் திருவிழா
அறந்தாங்கி, டிச.12- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் கல்வி குழுமத்தின் செலக்சன் நர்சரி பிரைமரி பள்ளியில் பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் மாணவர்களின் உணவுத் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் கண்ணையன் தலைமை வகித்தார். அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார்.  நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் ஆறுமுகம், வர்த்தக சங்க செயலாளர் செந்தில்குமார், வர்த்தக பொருளாளர் சலீம், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் வீரமணிகண்டன், ரவிசங்கர், பார்த்திபன், ஜாகீர் உசேன், ஜேஸிஐ முன்னாள் தலைவர் தீன், ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  பெற்றோர்கள்- மாணவர்களின் 120 உணவுப் படைப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. நிறைவாக ஆசிரியை உமா நன்றி கூறினார்.