கராத்தே போட்டி
அறந்தாங்கி, பிப்.3- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மேலப்பட்டில் பாரதி முற்றம் மற்றும் அஜாய் கராத்தே கிளப் சார்பாக கராத்தே, சிலம்பப் போட்டி நடைபெற்றது. பாரதி முற்றம் நிறுவனர் அஜாய் குமார் கோஷ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அஞ்சல் துறை வீரையா வரவேற்றார். ஆவனத்தாங்கோட்டை மேற்கு அரசு பள்ளி, செட்டி காடு அரசு பள்ளி, அன்னை மீனாட்சி நாச்சியார் பள்ளி, வெஸ்ட்லி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பப் போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகள் வழங்கப் பட்டன. அறந்தாங்கி வட்டார வளமைய மேற்பார்வையா ளர் சிவயோகம், மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் பெரி.குமார வேல், ஊராட்சி தலைவர்கள் ஆயிங்குடி கருணாநிதி, ஆவனத்தாங்கோட்டை கரு ணாநிதி வாழ்த்தி பேசினர். அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். நிறைவாக பாரதி முற்றம் ஒருங்கிணைப் பாளர் பாரதி நன்றி கூறினார்.
அரசு மருத்துவக் கல்லூரியில் கண் சிகிச்சைக்கு லேசர் பிரிவு தொடக்கம்
மன்னார்குடி, பிப்.3- திருவாரூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் சர்க்கரை நோ யாளிகளுக்கு ஏற்படும் கண் பார்வை குறைபாடுகளுக் கான சிகிச்சை அளிக்க நவீன லேசர் சிகிச்சை பிரிவு தொ டங்கப்பட்டுள்ளது. இப்பிரி வில் சர்க்கரை நோயாளிக ளுக்கு கண்களில் ஏற்படும் விழித்திரையில் நீர்கோர்ப்பு மற்றும் இதர பாதிப்புகளு க்கு நவீன லேசர் சிகிச்சை கருவி வாயிலாக சிகிச்சை அளிக்கப்படும். இதற்கான மருத்துவப் பிரிவை மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா திறந்து வைத்தார். கண் சிகிச்சைப் பிரிவு துறைத்தலைவர் அன்புச்செல்வி லேசர் சிகிச் சைகள் குறித்து விளக்கினார். மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமை உரையில், தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள நவீன லேசர் சிகிச்சை கருவி யானது தனியார் மருத்துவ மனை பயன்பாட்டில் உள்ள கருவிகளுக்கு இணையானது. சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு களுக்கு சிறந்த சிகிச்சையை பொதுமக்கள் இனி இலவச மாக பெறலாம்.