tamilnadu

img

பொன்னமராவதி காவல் பணியில் ஈடுபட்ட பெண் காவலர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் காவலர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த 18-ம் தேதி ஒரு சமூகத்தை இழிவாக பேசிய விவகாரம் தொடர்பாக கலவரம் வெடித்தது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கடந்த 19-ம் தேதி காலை முதல் இன்று வரை பொன்னமராவதி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் பாதுகாப்பு பணியில் கடந்த 19-ம் தேதி முதல் ஈடுபட்டு வரும் புதுக்கோட்டை ஆயுதப் படையில் பணியாற்றும் ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த பெண் காவலர் நந்தினி கடந்த 7 நாட்களாக பொன்னமராவதியில் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் அவர் நேற்று மாலை வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்த காவலர்கள் அவரை சோதனை செய்தபோது அவர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவலர் நந்தினியை பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் தற்கொலைக்கு முயற்சித்த காவலர் நந்தினியின் செல்போனை போலீசார் சோதனை செய்தபோது அதில் அவர் தனது தற்கொலைக்கு ரைட்டர் தான் காரணம் அவரது அறையில் முன்பாகவே நான் தற்கொலைக்கு முயற்சிபேன் என்ற 11 நொடி ஆடியோ ஒன்று பதிவாகியுள்ளது. அதைக் கைப்பற்றிய போலீஸார் அந்த ஆடியோ குறித்தும் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;