tamilnadu

img

மருத்துவத் துறையில் இனி அரசு நியமனம்தான்.... அவுட்சோர்சிங்முறை ஒழிக்கப்படும்.... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்....

புதுக்கோட்டை:
மருத்துவத்துறையில் அவுட்சோர்சிங் முறை ஒழிக்கப்பட்டு இனி நேரடியாக அரசு நியமனம் செய்யப்படும் என்றார் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன்;. புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகுஅவர் செய்தியாளர்களிடம் தெரி வித்ததாவது:

தமிழ்நாட்டின் மருத்துவத் துறையில், 2 ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர்கள், 3,700 மருத்துவம் அல்லாத பணியாளர்களும்அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மூலம் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் அளித்துள்ளோம். ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. நல்ல தீர்வு கிடைக்குமென எதிர்பார்க்கிறோம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென தில்லியில் பிரதமரைச் சந்தித்து முதல்வர் வலியுறுத்தி யுள்ளார்.

10.20 கோடி தடுப்பூசி தேவை
தமிழ்நாட்டுக்கு 11.36 கோடி தடுப்பூசிகள் தேவை. இதுவரை 1.16 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. 10.20 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. வாரத்துக்கு இரண்டு கோடிவீதம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கினால் தமிழ்நாட்டிலுள்ள அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போட்டுவிடலாம். இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டால் மூன்றாவது அலையைப் பற்றிய கவலைப்படத் தேவையில்லை.  அரசுக் காப்பீட்டுத் திட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா, பூஞ்சை தொற்றுகளுக்கு ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்களின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்றாவது அலையை சமாளிப்பதற்கான கட்டமைப்புகளை உறுதிப்படுத்தவே இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டுள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் கல்லூரிப் பணிகள் தொடங்கப்படும். மருத்துவத் துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள பணியாளர்களின் ஊதியப் பிரச்சனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் அவுட்சோர்சிங் முறை முழுமையாக ஒழிக்கப்படும். இதர பணியாளர்கள் அரசு மூலம்நேரடியாக நியமனம் செய்யப்படு வதைப் போல மருத்துவத் துறை பணியாளர்களும் நேரடியாக அரசின் மூலம் நியமிக்கப்படுவர். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.கூட்டத்தில், மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன், மாநில மருத்துவத் துறை அரசு முதன்மைச் செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கந்தர்வகோட்டை எம்.சின்னத்துரை, விராலிமலை சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை வை.முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வரவேற்றார். கூட்டத்தில் மருத்துவத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

;