districts

img

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நூல் வெளியீடு  

சென்னை,ஜன.14- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதிய ‘ஓடலாம் வாங்க’ எனும் தமிழ் நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளியீட்டு விழா, சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியின் திறந்தவெளி அரங்கத்தில் நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நூலை வெளியிட, மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இயக்குநர் சிசில் மனோஜ் சுந்தர் பெற்றுக் கொண்டார். திரைப்பட நடிகர்கள் பாண்டிய ராஜன், போஸ் வெங்கட், எழுத்தாளர் இந்துமதி, இசையமைப்பாளர் காந்த் தேவா, கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். விழாவில் பேசிய அமைச்சர், “தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு நேரமில்லை என்று கூறுபவர்களுக்கு இந்த புத்தகம் சாட்சியாக இருக்கும்”என்றார். 2004 ஆம் ஆண்டு எனக்கு ஏற்பட்ட விபத்தால் 5 மாதங்கள் நடக்கக்கூட முடியவில்லை. அதன்பின்னர் மெல்ல, மெல்ல நடந்து தொடர் முயற்சியால் மராத்தான் ஓடும் அளவுக்கு முன்னேறினேன். இதுவரை 139 மராத்தான் ஓடியுள்ளேன். தனிமனித ஒழுக்கம், சீரான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஒரு மனிதனுக்கு நீண்டஆயுளும், மகிழ்ச்சியான வாழ்வையும் வழங்கும் என்றும் அவர் கூறினார். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ‘‘அமைச்சர் சுப்பிரமணியன் செய்தது மகத்தான சாதனையாகும். இதை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இந்நூல் இளைஞர்களுக்கு மிகுந்த உத்வேகம் அளிப்பதாக இருக்கும்’’ என்றார்.

;