tamilnadu

இணையத் தமிழ் வளர்ச்சி பயிற்சி

 புதுக்கோட்டை, செப்.2- கணினி தமிழ் சங்கத்தின் மூலம் சிறந்த கணினி வல்லுநர்களை கொண்டு தமிழில் வலைப்பக்கம் உருவாக்குவது, விக்கி பீடியாவில் தமிழில் கட்டுரைகளை எழுதுவது, குரல் வழிப் பதிவேற்றம், இலவச மின்னூல் பதிவிறக்கம், யூ டியூப்பில் பதிவேற்றம் போன்ற பல்வேறு தலைப்புகளில் இணையத்தில் தமிழை கையாளு வது குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.  மேலும், இணையத்தில் தமிழ் வளர்ச்சி வாய்ப்புகள், வலைதளங்களில் செய்ய வேண்டியது, செய்யக் கூடாது என்பனவற்றை பற்றி விளக்க உரையும் நிகழ்த்தப்பட உள்ளது. இப்பயிற்சி பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனரும், கணினி தமிழ் சங்கத்தின் நிறுவனருமான அருள்முருகன் தலைமையில் புதுக்கோட்டையில் வரும் அக்டோபர் 12, 13-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. கூடு தல் விவரங்களை 9443193293 எண்ணை தொடர்பு கொள்ள லாம் என புதுக்கோட்டை கணினி தமிழ்ச்சங்க ஒருங்கி ணைப்பாளர் நா.முத்துநிலவன் தெரிவித்துள்ளார்.