அறந்தாங்கி, பிப்.22- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் இயங்கிவரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகவல் அறிவியல் மற்றும் செயல்முறைத்திட்டம் பற்றிய கருத்தரங்கம் கல்லூரியின் திரு வள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் இரா.கண்ணன் தலைமை ஏற்று துவக்கி வைத்தார். வணிகவியல் துறை தலைவர் என். கே.ராஜேந்திரன் வரவேற்றார். சென்னை மாநிலக் கல்லூரி புள்ளியியல் துறை பேராசிரியர் முனைவர் ஆர்.சக்திவேல் தகவல் அறிவியல் மற்றும் செயல்முறைத்திட்டம் பற்றி கரு த்துரை வழங்கினார். இதில் பட்டமேற்படிப்பு மாணவ-மாணவி கள் கலந்து கொண்டனர். வணிகவியல் துறை பேராசிரியை பி.மலர்விழி நன்றி கூறினார்.