tamilnadu

img

தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஊடகமாக திகழ்வது அரசுப் பள்ளிகளே! ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் பேச்சு

புதுக்கோட்டை, பிப்.22- தமிழ் மொழியை அடுத்த தலை முறைக்கு கடத்தும் ஊடகமாக அரசுப் பள்ளிகளும், அதில் படிக்கும் மாணவர்களுமே திகழ்கின்றனர் என்றார் ஐஏஎஸ் அதிகாரி உ.சகா யம். புதுக்கோட்டை புத்தகத் திரு விழாவில் வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது: புதுக்கோட்டைக்குப் பக்க த்தில் பெருஞ்சுனை என்ற கிரா மத்தில் சாதாரண விவசாயக் குடும்ப த்தில் பிறந்த நான் அரசுப் பள்ளியில்  படித்து உங்கள் முன் ஐஏஎஸ் அதி காரியாக நிற்கிறேன்.  சட்டப்படி ப்பை படித்துக் கொண்டே குடிமை ப்பணித் தேர்வை எழுத எனக்குப் பணத் தேவை ஏற்பட்டதால் தொ ண்டு நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டே படித்தேன். முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற நேர்கா ணலில் இந்தியாவின் ஆட்சிமொழி யாக நீங்கள் எந்த மொழியைப் பரி ந்துரைப்பீர்கள் என்று நேர்கா ணலில் அதிகாரி கேட்டார். இந்தியை ஏன் தமிழ்நாட்டு மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை மனதில் வைத்தே அந்தக் கேள்வி யைக் கேட்டார். இதில் தேர்ச்சி பெற்றுவிட்டால் ஐஏஎஸ் அதிகாரி என்ற நிலையிலும் 25 வயதே ஆன நான், இலக்கிய வளம்மிக்க உலகின் மூத்த மொழியான தமிழை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்றேன்.                                                                                                                                                                                                              புத்தகத்தை தேடிப் படித்ததால்தான்
நூறு பேருடன் உறவாடினால், உரையாடினால் கிடைக்கும் அனுப வத்தை ஒரு புத்தகம் தந்துவிடு கிறது. நூல்களை தேடிப் படித்த தால்தான் அண்ணா அறிஞர்  ஆனார். அண்ணல் அம்பேத்கர் மிக ச்சிறந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்க முடிந்தது. உலகத்துக்கே வழிகாட்டியாக விள ங்கும் மூலதனத்தை காரல் மார்க்ஸ்  இயற்ற முடிந்தது. இன்று நல்ல நூல்களைத் தேடிப் படிப்பவர்களே நாளைய தலைவர்களாக உரு வாக முடியும். ஏழை மாணவர்கள் கல்விக்கான  புகலிடமாக அரசுப் பள்ளிகளை த்தான் நம்பி இருக்க வேண்டி யிருக்கிறது. நான் மாவட்ட ஆட்சி யராக இருந்த போதெல்லாம் அரசுப் பள்ளிகளுக்கு தேடித் தேடிச் சென்று மாணவர்களை ஊக்குவி த்தேன். நமது தாய்மொழியான தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஊடகமாக அரசுப் பள்ளி களும் அதில் படிக்கும் மாணவர்க ளுமே உள்ளனர். எல்லா குடி மக்களுக்கும் சமத்துவமான கல்வி  கிடைக்க வேண்டும் என்று அரசியல்  சாசனம் கூறுகிறது. அவ்வாறு சம மான கல்வி கிடைக்கிறதா என்பது தான் கேள்வியாக இருக்கிறது. இதுபோன்ற புத்தகக் கண்கா ட்சிகள் நிறைய நடக்க வேண்டும். இதன் மூலம் கடைக்கோடி தமிழ னுக்கும் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும். நல்ல புத்த கங்களை, ஆசிரியர்களை, அலுவ லர்களை, தலைவர்களை கூர்ந்து  கவனிக்க வேண்டும். எல்லா வற்றுக்கும் கைத்தட்டிச் செல்லும் கூட்டமாக இல்லாமல், செயல்பட வேண்டிய காலத்தில் நாம் நிற்கி றோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி மாவ ட்டக் கல்வி அலுவலர் கு.திரா விடச்செல்வம் தலைமை வகித்தார்.  தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஈரோடு மகேஷ், அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் அ.வெ.சுகுமாறன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக மா.சிவானந்தம் வர வேற்க ரா.செல்லப்பன் நன்றி கூறினார்.                    

;