புதுக்கோட்டை அருகே இடி மின்னல் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் அருகே செம்பாட்டூர் கிராமத்தில் பணியாளர்கள் வழக்கம்போல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.