tamilnadu

img

வேளாண் கல்லூரி மாணவியரின் களப் பயிற்சி

புதுக்கோட்டை,செப். 21- புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் உள்ள கொளுஞ்சி விவசாயப் பண்ணையில் திருச்சி ரோவர் கல்லூரியில் பயிலும் வேளாண்துறை மாணவியர் களப்பயிற்சி மேற்கொண்டனர். இப்பயிற்சி கடந்த 14.9.2019- அன்று தொடங்கி 21-ஆம் தேதிவரை நடைபெற்றது. இப்பயிற்சியின் களப் பயிற்சியில் கோயில் வீரக்குடி, பழைய வீரக்குடி ஆகிய கிராமங்களில் உள்ள இயற்கை வேளாண்மை செய்வது, ரசாயன உரங்கள் தவிர்த்து விவசாயம் மேற்கொள்வது, பஞ்ச காவ்யா தயாரிப்பது, இயற்கை மண்புழு தயாரித்தல் போன்ற பயிற்சிகளைப் பெற்றனர். கல்லூரியின் முதல்வர் கதிரேசன், கொளுஞ்சி பண்ணையின் இயக்குநர் அர்னால்ட் குவிண்டால், மேலாண்மை இயக்குநர் பங்கயவல்லி, பவுல்ராஜ், செல்லத்துரை, இராமச்சந்திரன், கண்ணன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.அர்னால்ட் குவிண்டால் கூறுகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு இயற்கை சார்ந்த பயிற்சிகள் அளிக்கும்போது கொளுஞ்சி பண்ணை முன்னுரிமையளிக்கிறது. தமிழகத்தில் உள்ள 75-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர் வந்து இயற்கைச் சூழலியல் மட்டுமல்லாது நஞ்சில்லா உணவு முறை, விஷமில்லா வேளாண்மை உற்பத்தி முறைகள், போன்றவற்றைக் கற்றுக் கொள்ள அனைத்து வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகளவில் ரசாயனக் கலப்பில்லா உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வருவதால் அவற்றைக் களப் பயிற்சிக்காகக் கற்றுக் கொள்ளவும் வழிவகை செய்கிறது. அந்த வகையில் இங்கு இப்போது பயிற்சியில் உள்ள ரோவர் கல்லூரி மாணவியர் சி.பிரியதர்சினி, எஸ்.பிரியதர்ஷினி, ஷமீன்பானு, செந்தமிழ்ச்செல்வி, சந்தியா, சண்முகப்பிரியா, சிவகாமசுந்தரி, சௌமியா ஆகியோர் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் வந்து பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் இங்கு பெற்றிருக்கும் பயிற்சியானது வேளாண்துறையில், அவர்கள் பணி செய்யும் பகுதிகளில் விவசாயிகளுக்கு பெரும் மாற்றத்தைச் செய்ய உதவியாக இருக்கும் என்றார்.புதுக்கோட்டை,செப். 21- புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் உள்ள கொளுஞ்சி விவசாயப் பண்ணையில் திருச்சி ரோவர் கல்லூரியில் பயிலும் வேளாண்துறை மாணவியர் களப்பயிற்சி மேற்கொண்டனர். இப்பயிற்சி கடந்த 14.9.2019- அன்று தொடங்கி 21-ஆம் தேதிவரை நடைபெற்றது. இப்பயிற்சியின் களப் பயிற்சியில் கோயில் வீரக்குடி, பழைய வீரக்குடி ஆகிய கிராமங்களில் உள்ள இயற்கை வேளாண்மை செய்வது, ரசாயன உரங்கள் தவிர்த்து விவசாயம் மேற்கொள்வது, பஞ்ச காவ்யா தயாரிப்பது, இயற்கை மண்புழு தயாரித்தல் போன்ற பயிற்சிகளைப் பெற்றனர். கல்லூரியின் முதல்வர் கதிரேசன், கொளுஞ்சி பண்ணையின் இயக்குநர் அர்னால்ட் குவிண்டால், மேலாண்மை இயக்குநர் பங்கயவல்லி, பவுல்ராஜ், செல்லத்துரை, இராமச்சந்திரன், கண்ணன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.அர்னால்ட் குவிண்டால் கூறுகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு இயற்கை சார்ந்த பயிற்சிகள் அளிக்கும்போது கொளுஞ்சி பண்ணை முன்னுரிமையளிக்கிறது. தமிழகத்தில் உள்ள 75-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர் வந்து இயற்கைச் சூழலியல் மட்டுமல்லாது நஞ்சில்லா உணவு முறை, விஷமில்லா வேளாண்மை உற்பத்தி முறைகள், போன்றவற்றைக் கற்றுக் கொள்ள அனைத்து வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகளவில் ரசாயனக் கலப்பில்லா உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வருவதால் அவற்றைக் களப் பயிற்சிக்காகக் கற்றுக் கொள்ளவும் வழிவகை செய்கிறது. அந்த வகையில் இங்கு இப்போது பயிற்சியில் உள்ள ரோவர் கல்லூரி மாணவியர் சி.பிரியதர்சினி, எஸ்.பிரியதர்ஷினி, ஷமீன்பானு, செந்தமிழ்ச்செல்வி, சந்தியா, சண்முகப்பிரியா, சிவகாமசுந்தரி, சௌமியா ஆகியோர் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் வந்து பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் இங்கு பெற்றிருக்கும் பயிற்சியானது வேளாண்துறையில், அவர்கள் பணி செய்யும் பகுதிகளில் விவசாயிகளுக்கு பெரும் மாற்றத்தைச் செய்ய உதவியாக இருக்கும் என்றார்.