tamilnadu

இன்று மாவட்ட கேரம் போட்டிகள்

புதுக்கோட்டை, அக்.21-  2019-20 ஆம் ஆண்டிற்கான புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்ததாவது. கடந்த 16-ல் நடைபெறுவதாக இருந்த மாவட்ட அள விலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் மழை மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை காரணமாக ஒத்தி வைக்கப் பட்டது. இதனையடுத்து இளநிலைப் பிரிவு மழலை வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு களும், முதுநிலைப் பிரிவு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் 22.10.2019 அன்று காலை 9 முதல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் கேரம் போட்டிகள் நடத்தப்படும்.