குடும்பங்களுக்குத் தேவையான 21 அத்தியாவசியப் பொருட்களை ரேசன்கடைகளில் இலவசமாக வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை, மழவராயன்பட்டி, பொன்னமராவதி உள்ளிட்ட மாவட்டத்தில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி மற்றும் நிர்வாகிகள் பேசினர்.