புதுக்கோட்டை, ஆக.12- கேரளாவில் நடைபெற்ற உலக பிராமணர்கள் மாநாட்டில் மனிதர்களை நாய், குதிரைகளுடன் ஒப்பிட்டும் சாதியை நியாயப்படுத்தியும் பேசிய வெங்கடகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அபெகா பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இயங்கி வரும் அபெகா(அம்பேத்கர், பெரியார், காரல்மார்க்ஸ்) பண்பாட்டு இயக்கத் தின் தலைவர் மருத்துவர் நா.ஜெய ராமன் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில்: 12.08.2019 அன்று வாட்ஸ்அப் மூலமாக எனக்கு அனுப்பப்பட்ட காணொளி காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். கடந்த ஜூன் மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் கொச்சியில் நடை பெற்ற உலக பிராமணர்கள் மாநாட்டில் தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழக பேராசிரியர் வெங்கடகிருஷ்ணன் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அதில், நாய்களில் பல ஜாதி இருப் பது போல மனிதர்களிலும் கீழ்ஜாதி, மேல்ஜாதி உள்ளது என்றும் அதே போல குதிரையிலும் பல ஜாதிகள் என்றும் மனிதர்களை நாய் மற்றும் குதிரையுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இது மக்களிடையே சாதிய ரீதியான விரோத உணர்ச்சிகளையும், பிரி வினையையும் தூண்டும் கெட்ட நோக் கில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும், பொது அமைதிக்கு குந்தகம் விளை விக்கும் நோக்கிலும், மனித மாண் பினை அவமதிக்கும் வகையிலும் அமைந் துள்ளது. மனிதர்களை நாயுடனும், குதி ரையுடனும் ஒப்பிட்டும் சமூகத்தில் சாதி இருப்பதை நியாயப்படுத்தியும் அவர் பேசியுள்ளது இந்திய இறை யாண்மைக்கு எதிரானது மட்டுமல்ல. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14-க்கு எதிரானதாகும். எனவே, இந்திய தண் டனைச் சட்டம் பிரிவுகள் 153(யு), 153(டீ), 29டீ, 499 மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வெங்கடகிருஷ்ணன் மீதும், அதற்கு உடந்தையாக செயல் பட்டவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.