புதுக்கோட்டை, மே 20-புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் இருபாலர் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் 12 முதல்25 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.400 வழங்கப்படும். ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் மாவட்டஅரசு இசைப்பள்ளி, கதவு எண் 1883, திலகர் திடல் புதுக்கோட்டை என்ற முகவரியில் தலைமையாசிரியரை நேரில் அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 04322- 225575, 94861- 52007 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.