tamilnadu

img

சாவர்க்கர் என்று ஏன் சுற்ற வேண்டும்..? நேரடியாக கோட்சேவுக்கே ‘பாரத ரத்னா’ தந்துவிடலாம்

நாக்பூர்:
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வி.டி. சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருதுவழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந் தது சர்ச்சையை ஏற்படுத்தியது.துவக்க காலத்தில் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டாலும், பின்னாளில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத் திற்கு சாகும்வரை விசுவாசமாக இருப்பேன் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் எனப்படும் வி.டி. சாவர்க்கர் ஆவார். மகாத்மா காந்தியைப் படுகொலை வழக்கில் 7-ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கடைசிநேரத்தில் தண்டனையிலிருந்து தப்பியவர். கோட்சேவின் குருநாதரே சாவர்க்கர்தான். எனவே, சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது என்று அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது. பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், நாக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, “தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசானது, சாவர்க்கருக்குப் பதிலாக நாதுராம் கோட்சேவுக்கே ‘பாரத ரத்னா’ விருதை வழங்கி விடலாம்” என்று பாஜக-வை சாடியுள்ளார். “காந்தியின் 150-ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின்போது, அவரைப் படுகொலை செய்தவருக்கு விருது வழங்குவது பொருத்தமாகவும் இருக் கும்” என்று திவாரி குறிப்பிட்டுள்ளார்.

;