பீகார் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் மணி ஹரி தொகுதியின் நாராயணபூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட போச்சாஹி கிராமத்தில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 5 சிறுவர்கள் வெள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். மேலும் உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கதிஹாரில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஐ எட்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.