tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்...

பிப்ரவரி 4

சிறந்த கம்யூனிஸ்டும் உருதுக்கவிஞருமான மக்தூம் மொகிதீன். பிறந்த நாள். 1908ல் ஆந்திர மாநிலம் அண்டோலில் பிறந்த மக்தூம் மொகிதீன், உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர். புரட்சிகரமான உருதுக் கவிதைகளை எழுதிக் குவித்தார். இவர் ஆந்திர மாநிலத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கியவர். இவர் தமது புரட்சிகர உருதுக் கவிதைகளுக்காக 1969ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். இவரது பல பாடல்கள் இந்தித் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஊழியரான மக்தூம் மொகிதீன் 1946-47 காலகட்டத்தில் ஆந்திராவில் நிஜாம் மன்னனை எதிர்த்து நடைபெற்ற தெலுங்கானா பேரெழுச்சியில் ஈடுபட்டார்.  ஆந்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவை உறுப்பினராக 1956-59 காலகட்டத்தில் பணியாற்றியதோடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார். சோஷலிச சோவியத் யூனியன் உதவியுடன் ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவிற்குப் பயணம் செய்துள்ளார். உலகில் முதன்முறையாக விண்வெளிக்குச் சென்று சாதனை நிகழ்த்திய யூரிககாரினை மாஸ்கோவில் சந்தித்ததுடன் அவரைப் பற்றிய கவிதையையும் படைத்தவர் மக்தூம் மொகிதீன்.

- பெரணமல்லூர் சேகரன்