tamilnadu

img

பட்டியலின, பழங்குடியின மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துக!

முதல்வருக்கு பல்லாயிரக்கணக்கானோர் மனு

சென்னை,ஜூலை 17 - ஊரடங்கு காலத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மீது அதிகரித்துள்ள கொடூரத் தாக்குதல்களை தடுத்து நிறுத்திடக் கோரி, தமிழக முதல்வருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மனுவை, பல்லாயிரக்கணக் கானோர் ஆன்லைன் வாயிலாக தமிழக முதல்வருக்கு அனுப்பினர். மார்க்சிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று, chang.org இணையதளத்தின் வாயிலாக இந்த மனுவை அனைவரும் கையெழுத்திட்டு அனுப்பிவைத்தனர். மனு அனுப்பும் இயக்கத்தை, கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மனுவில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு: 

கொரோனா ஊரடங்கு  நேரத்திலும்  தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் மற்றும்  பழங்குடியின மக்கள் மீது கொடூரமான தாக்கு தல்கள், படுகொலைகள், பாலியல் வல்லுறவு கள், ஆணவப் படுகொலைகள், சொத்துக்கள் அழிப்பு, தாக்குதல்கள் என  தொடர்கின்றன. வன்கொடுமை தடுப்புச் சட்டம், உச்சநீதி மன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகள், மாநில, மாவட்ட அளவிலான தீண்டாமை ஒழிப்பு குழுக்கள், சிறப்பு நீதிமன்றங்கள் என பல நிர்வாக அமைப்பு கள் இருந்தபோதும் பட்டியலின மற்றும் பழங்குடியினர் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. கொரோனா தொற்று கொடுந்துயர காலத்திலும் கூட பட்டிய லின மற்றும் பழங்குடியினர் மக்கள் மீதான தாக்கு தல்கள் நின்றபாடில்லை என்பது மட்டுமல்ல, பல மடங்கு அதிகரித்துக் கொண்டும் உள்ளன. கொரோனா பாதிப்பு துவங்கிய கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் வரையிலான குறுகிய  காலத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள பல்வேறு  தாக்கு தல் விபரங்களை  தொகுத்து தமிழக முதல் வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு ஊர் வாரியாக, குற்றங்கள் வாரியாக கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.

இக்காலத்தில் சுமார் 11 கொலைகள், 3 ஆண வப் படுகொலைகள், பல பாலியல் வன்முறை கள், 80க்கும் மேற்பட்ட தாக்குதல்கள், சொத்து கள் அழிப்பு, அவமானப்படுத்துதல் போன்றவை  நடந்துள்ளன. இவை, நடந்த மொத்த வன்கொ டுமைகளில் கவனத்திற்கு வந்துள்ள  ஒரு பகுதியே.  இவற்றின் மீது பெரும்பகுதியான  இடங் களில் காவல்துறையினர்  உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி, மிகுந்த வற்புறுத்த லுக்கு பின்னரே நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன  என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

அறந்தாங்கியில் ஏழு வயது பட்டியல் சாதி சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டுள்ளார் என்பது அண்மைய கொடூரம். இது தவிர மனித வாழ்வின் எல்லா அம்சங்களி லும் பட்டியல் சாதியினர் பாரபட்சங்களை, வன்கொடுமைகளை எதிர் கொள்கிறார்கள் என்பதற்கு தமிழகம் முழுமையும் ஊரடங்கின் 100 நாட்களில் நடந்தேறியுள்ள குற்றங்கள் சாட்சியம். நிலம், சொத்துக்கள் அபகரிப்பிற்கான தாக்குதல்கள் ஏவி விடப்பட்டுள்ளன. சாதி மறுப்பு தம்பதிகள் படுகொலை, பட்டி யல் சாதி பெண்கள் மீது கும்பல் பாலியல்  தாக்குதல்கள், காதலிப்பதாக ஏமாற்றி பாலி யல் உறவுக்கு ஆட்படுத்தி கைவிடுவது, புகைப் படங்களை வலைத் தளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டி தற்கொலைக்கு தள்ளுவது ஆகியனவும் இவற்றில் அடக்கம்.

கந்து வட்டிக் கடனை அடைத்து விட்டு அடமான பத்திரத்தை திரும்ப கேட்டதற்காக கொலை அரங்கேறியுள்ளது. காவல் மற்றும் அரசு அதிகாரிகளின் பார பட்சம், தாக்குதல்களும் இக்காலத்தில் நடந்துள்ளன. பட்டியல் சாதி உள்ளாட்சி தலைவர்களை செயல்பட விடாமல் தடுப்பது, அவர்களை சாதிய ரீதியான தொழில்களைச் செய்ய நிர்ப்பந்திப் பது, இழிவு செய்வது ஆகிய கொடூரங்களும் இவற்றில் உண்டு.

அன்றாட வாழ்க்கைக்கான சிவில் உரிமை கள் கூட பட்டியல் சாதி மக்களுக்கான மறுக்கப் படும் தீண்டாமைக் கொடுமைகள் நடந்தேறி யுள்ளன. இரு சக்கர வாகனத்தில் சென்றத ற்காக, பேருந்து நிறுத்தத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததற்காக, ஏரியில் நீர் எடுத்தத ற்காக, பட்டியல் சாதி குடியிருப்பிற்கு அருகே வேகத் தடை அமைத்ததற்காக தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. பட்டியல் சாதி மாணவ ர்களை பள்ளிகளில் கழிப்பறை சுத்தம் செய்ய  வைப்பது, மயானங்களில் புதைக்க அனுமதி மறுப்பது, அம்பேத்கர் சிலைக்கு அவமரியாதை செய்வது போன்ற கொடுமைகளும் அரங்கேற்றப்பட்டுள்ளன. அரசு இத்தகைய கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட வேண்டும். அதற்காக பின்வரும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கோருகிறோம்.

கோரிக்கைகள்

மேற்கண்ட ஒவ்வொரு வன்கொடுமையிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கண்காணிப் பாளர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உரிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்களா, பாதிக்கப் பட்டவர்களுக்கு  உரிய பாதுகாப்பு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப் படும் நிவாரணத் தொகை வழங்கப் பட்டுள்ளதா, போன்றவை குறித்து   ஆய்வு  செய்து, அதன் அடிப்படையில் சட்டப்படியான  நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.  குற்றம் இழைத்துள்ளவர்கள் எந்த சூழ்நிலை யிலும்  தண்டனையிலிருந்து தப்பி விடாதவாறு உரிய நீதிமன்ற நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். மேலும் இவ்வன்கொடு மைகளில் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் உரிய பரிசீலனை மேற்கொண்டு, தவறிழைத்துள்ள காவல் அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும்.

    எஸ்சி/எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் படி விழிப்பு மற்றும் கண்காணி ப்புக் குழுவின் தலைவர் என்கிற முறையில் தமிழக முதலமைச்சர் தலைமையில் நடத்தப் பட வேண்டிய பரிசீலனை கூட்டத்தை நடத்திட வேண்டும். மாவட்ட அளவிலும் இந்த கண்காணிப்புக்குழு கூட்டங்களை முறையாக நடத்திட வேண்டும்.  இக்கூட்டங்களில் மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசு அறிக்கையாக செய்திகள் வெளியிட வேண்டும்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய நிதி,  நிலம், நிவாரணம் மற்றும் அரசு வேலையை போதுமான நிதி ஒதுக்கீடு செய்து தாமத மின்றி வழங்கிட வேண்டும்.

வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தண்ட னையை உறுதிப்படுத்தக் கூடிய விதத்தில் உறுதியான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி பதிவு  செய்யப்படுகிற வழக்குகளில் 60 தினங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல்     செய்து, 120 தினங்களில் வழக்கை முடித்திட வேண்டும். சில வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக (கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், புதுக்கூரைப்பேட்டை முருகேசன், கண்ணகி தம்பதியினர் கொலை  வழக்கு) நடந்து வருவது குற்றவாளிகள்  தப்பிப்பதற்கே வழிவகை  செய்யும்.  எஸ்.சி.,/எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்ட விதி கள் 4(5)ன் படி பாதிக்கப்பட்டவர்கள் கோருகிற  வழக்கு களில் அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்கவேண்டும்.

தற்போது 6 சிறப்பு நீதிமன்றங்களே உள்ள நிலையில் மேலும் சில மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும்.

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் படி மாநில காவல் இயக்குனர் மற்றும் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர்கள் இணைந்து மாநிலத்தில் வன்கொடு மைகள் அதிகம் நடைபெறக்கூடிய பகுதிகளை கண்டறிந்து  தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த அறிக்கையை மாநில அரசிற்கு வழங்கிட வேண்டும்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாக்கல் செய்த  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் (WP 26991ன் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும் என்கிற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எண் 460/2017) சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்ட அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அறி வித்திருக்கிற சிறப்பு பிரிவுகள் இயங்குவதை உறுதி செய்து சாதி மறுப்பு திருமணங்கள் மற்றும் தம்பதியர்க்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

சாதியக் கொடுமைகளும், சாதிய ஒடுக்குமுறையும் தொடர் வது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, நாகரிக சமூ கத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாகும். சாதிய  உணர்வுகளை, வெறியைத் துடைத்தெறியும் வகையில்  தமிழக அரசு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும்  மேற்கொள்ள வேண்டும். துவக்கப்பள்ளி முதல் பாடத்திட்ட த்தில் சாதி ஒழிப்பு பாடங்களை சேர்ப்பது, சாதிய வன்கொடு மைகளுக்கு முடிவு கட்டும் வகையில் தொலைக்காட்சி விளம்பரங்கள், சமூகப் பிரச்சார இயக்கங்களுக்கு அரசு திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

சமூக நீதி பாரம்பரியத்தை வலியுறுத்துகிற நாடகங்கள், கலை நிகழ்ச்சிகளை தமிழக அரசே நிதியுதவி செய்து நடத்திட வேண்டும்.

அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கம் உள்ளிட்ட மக்கள் அமைப்புகள் தீண்டாமை மற்றும் சாதிய கொடுமைகளை எதிர்த்து குரலெழுப்ப வேண்டுமென உறுதிமொழி ஏற்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும். உறுதியான நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம்  பட்டியலின பழங்குடி மக்கள் கையில் நிலம் கிடைப்பத ற்கான உறுதியான நடவடிக்கைகளையும் குறிப்பாக பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தி சாதிய ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.