tamilnadu

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் :- மக்களுக்குத் துன்பம் வரும் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வராது.
ச.சா - முதல்ல இந்த மக்கள்னா யாரைச் சொல்றீங்கனு தெளிவுபடுத்துவீங்களா..??
K K K
 மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம்:- கங்கை நீர் குடிநீராகப் பயன்படாது.
ச.சா - 3 ஆயிரம் கோடி, 4 ஆயிரம் கோடினு செலவு பண்ணுனதா சொன்னாங்களே..??
K K K
பிரிட்டன் நீதிமன்றம் கேள்வி :- நீரவ் மோடியை எந்த சிறையில் அடைப்பீர்கள்?
ச.சா - விட்டா, சாப்பாடு மெனு வேணும்னு கேப்பாங்க போலருக்கே..??
K K K
செய்தி :- இரும்புத்தாது உற்பத்தி செய்யும் பொதுத்துறை என்.எம்.டி.சி. நிறுவனத்தின் லாபம் மார்ச் காலாண்டில் ரூ.4,642 கோடியாக உள்ளது.
ச.சா - மூணு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படுற அம்பானி, அதானிக்கு இதக் கொடுத்துடுவாங்களே..??