tamilnadu

img

மழை-வெள்ளத்தால் பெரும் சேதம்

நீலகிரி  மக்களுக்கு  நிவாரணம்  வழங்க  சிபிஎம்  கோரிக்கை

நீலகிரி, ஆக.16- நீலகிரி மாவட்டத்தில் பெரு மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சேதமடைந்த பகுதிகளில் சீர மைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் அர சுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. அண்மையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த பெரு மழை மற்றும் வெள்ளத்தால் மாவட்டத்தில் பல இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அமைக்  கப்பட்டுள்ள 40 க்கும் மேற்பட்ட  முகாம்களில் ஐந்தாயிரத் திற்கும் அதிகமானோர்  தங்க  வைக்கப்பட்டுள்ளனர். இதில்  மிகக் கணிசமானோர் பெண்கள்  மற்றும் குழந்தைகள் ஆவர். வெள்ளம் மற்றும் மழையி னால் பாதிக்கப்பட்ட பகுதி களையும், நிவாரண முகாம் களையும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு குழு சென்று பார்வையிட்டது. கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், கோவை தொகுதி  மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன், கட்சியின் மாநிலக்  குழு உறுப்பினர்கள் டி.ரவீந்தி ரன், ஆர்.பத்ரி, சி.பத்மநாபன், மாவட்டச் செயலாளர் வி.ஏ. பாஸ்கரன் உள்ளிட்டோர் அடங்  கிய குழுவினரின் ஆய்வில்  கண்டறியப்பட்ட விபரங்களை யும், கோரிக்கைகளையும் இக்குழு மாவட்ட ஆட்சியரிடம்  அளித்தது.

வெள்ளத்தால் வீடு இடிந்  தும், ஆற்றில் அடித்துச் செல் லப்பட்டும் நான்கு பெண்கள், ஒரு குழந்தை உட்பட ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர். ஒவேலி பகுதியில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட ஒருவ ரின் உடல் இதுவரை மீட்கப்பட வில்லை. உயிரிழந்த குடும்பங்  களுக்கு தமிழக அரசின்  சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண மாக அறிவிக்கப்பட்டிருக்கி றது. இதோடு உயிரிழந்தவர்க ளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டு மென மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசை கேட்டுக்  கொண்டது. உதகை வட்டத்தில் எம ரால்டு, அவலாஞ்சி, முத்  தொரை பாலாடா, அனுமா புரம், நடுவட்டம் இந்திரா நகர்,  குருத்துக்குளி ஆகிய பகுதி களும், குந்தாவில் குந்தா பாலம்  பகுதியும், கூடலூரில் புத்தூர் வயல், புறமணவயல், காழம் புழா, அத்திப்பாளி, ஓவேலி ஆகிய பகுதிகளும், பந்தலூர் வட்டத்தில் சேரம்பாடி, சேரங்கோடு, கண்ணன்வயல், காவயல், சோலாடி, நாயக்கன்  சோலை, வெள்ளரி காலனி ஆகிய பகுதிகளும் பெருத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. பாதிப்படைந்துள்ள இந்த  பகுதிகளில் வசிக்கும் கணிச மான தாழ்த்தபட்ட மக்கள்  மற்றும் பழங்குடி மக்களின் வீடு கள் மிகவும் சேதமடைந்துள்ள தோடு, பல இடங்களில் வீடுகள்  முற்றிலும் இடிந்துள்ளன. எனவே சேதம் அடைந்த வீடு கள், முற்றிலும் இடிந்துள்ள வீடு களையும் விரைவாக புணர மைக்க அரசின் சார்பில் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கும் நடுவட்டம் இந்திரா  நகர், அனுமாபுரம், புறமண வயல், ஓவேலி உள்ளிட்ட பகுதி களிலும், மேலும் மலைச் சரி வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் உரிய மாற்று இடம் வழங்க வேண்டும். கூட லூர், நடுவட்டம், பந்தலூர் பகுதி களில் மின்சார இணைப்பு இல்லாத அனைத்து வீடுகளுக்  கும் உடனடியாக மின் இணைப்பு அளிக்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். உதகை, கூடலூர், பந்தலூர் ஆகிய வருவாய் வட்டங்களில் மலைக்காய்கறிகளான உரு ளைக்கிழங்கு, கேரட், முட்டை கோஸ், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்  களும், வாழை, இஞ்சி, மிளகு,  ஏலக்காய் உள்ளிட்ட பயிர்க ளும் முற்றிலும் மழை வெள்  ளத்தால் முற்றிலும் சேதமடைந்  துள்ளன. பயிர்களை இழந் துள்ள விவசாயிகளுக்கு இழப்  பிற்கு ஏற்ப உரிய இழப்பீடு வழங்க அரசின் சார்பில் நடவ டிக்கை எடுக்க வேண்டும். நிலப்  பட்டா இல்லாத விவசாயிகளுக் கும் இந்த இழப்பீடு கிடைக்க வேண்டும். மலைப்பகுதிகளில் பட்டா வழங்க தடை செய்யப்பட்டுள்ள அரசானை 1168-ஐ உடனடியாக ரத்து செய்து அனைவருக்கும் நிலப்  பட்டா வழங்க அரசுக்கு பரிந் துரைக்க வேண்டும்.

பெருமழையால் பாதிக்கப் பட்டுள்ள சாலைகள், குடி யிருப்பு பகுதிகள், தடுப்புச் சுவர்  கள் உள்ளிட்ட அனைத்து இடங்  களையும் போர்க்கால அடிப்  படையில் சீரமைத்திட கேட்டுக்  கொள்வதோடு, மேலும் சில  நாட்களுக்கு கனமழை இருக் கும் என வானிலை மையம் எச்சரித்திருப்பதால் உரிய பாது காப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மழை, வெள்ளதால் மாவட்  டத்தில் பெரும்பாலான கூலித்  தொழிலாளர்கள், விவசாயத்  தொழிலாளர்கள் வேலையிழந் துள்ள தால் வேலை இல்லா கால நிவாரண உதவியாக குடும்பத்திற்கு ரூ.10,000 வழங்க வேண்டும். நிலச்சரிவு மற்றும் வெள்ள ஆபத்து அடிக்  கடி வரும் என்பதால், மிகவும்  ஆபத்தான மற்றும் பாதுகாப்  பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்க ளுக்கு விரைவில் உரிய மாற்று இடங்களை வழங்க மாவட்ட நிர்  வாகம் பொருத்தமான தொரு  மாற்றுத் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

;