tamilnadu

img

தோழர் பி. முருகேசன் மறைவு

சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்

சென்னை, ஜூலை 22– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினரும், வடக்கு மாநகரச் செயலாளராகவும், பஞ்சாலை சங்கத்தின் தலைவர்களில் ஒருவ ராகவும் பணியாற்றிய தோழர் பி.முரு கேசன் அவர்கள் 21.07.2020 அன்று  உடல்நலக்குறைவால் மரணமடைந்துள் ளார் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த தோழர் பி. முருகேசன் விசைத்தறித் தொழிலாளியாக பணி செய்து, பின்னர் சிஐடியு சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தொழிலாளர்களின் உரிமை களுக்காக சிஐடியு சங்கம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றதுடன் அதனை முன்னின்று நடத்தியவர். திருப்பூர்  ஆஷர் மில் தொழிலாளியான பிறகு,  சிஐடியு தொழிற்சங்கத்தைக் கட்டுவதிலும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதிலும் முக்கிய பங்கு வகித்தவர். தோழர்கள் அனைவரிடத்திலும் நட்புடன் பழகி அனைவரின் நன்மதிப்பையும் பெற்ற வர். தோழர் முருகேசனின் மறைவு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சிஐடியு தொழிற்சங்கத்திற்கும் இழப்பாகும். அவரது மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரது மனைவி, இரண்டு மகள்கள், குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தனது ஆறுதலையும், அனு தாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.