tamilnadu

img

வடபழனி பணிமனையில் ஓய்வறை மீது பஸ் மோதி விபத்து

சென்னை, ஜூலை 28 - சென்னை வடபழனி பணி மனையில் பேருந்து மோதியதில் ஓய்வறை சுவர் இடிந்து விழுந்ததில் 2 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வடபழனி பேருந்து பணிமனை யில் உள்ள ஓய்வறையில் சனிக்கிழமை (ஜூலை 27) இரவு பணி  முடித்துவிட்டு  தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டி ருந்தனர். நள்ளிரவு சுமார்  ஒரு மணி அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் ஒன்றை பழுது பார்ப்பதற்காக தொழில்நுட்ப ஊழியர் பாலமுருகன் வேலைசெய்யும் இடத்திற்கு ஓட்டிச்சென்றார். அப்போது பாலமுருகனின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வேக மாக சென்று ஓய்வறை மீது மோதி யது. ஓய்வறையின் சுவர் இடிந்து விழுந்ததில், தூங்கிக் கொண்டிருந்த பி.பாரதி (வயது 30), கே.சேகர் (வயது 40) ஆகிய இருவரும் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மாசிலாமணி (வயது 49), தணிகை மலை (வயது 41), யுவராஜ் (வயது 43), பட்டுசாமி (வயது 38), பாலமுருகன் (வயது 37), காளிசா (வயது 47) ஆகியோர் படுகாயமடைந்தனர்.  படுகாயமடைந்தவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொழிலாளர்கள் போராட்டம் 

தகவல் அறிந்து அதிர்ச்சியுற்று பணி மனைக்கு ஞாயிறன்று (ஜூலை 28) அதிகாலை  வந்த ஊழியர்கள் பேருந்து களை எடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்த ஊழியர்களுக்கு, காவல்துறையினருக்கு வழங்கு வதுபோல் முதலமைச்சர் பொது நிவா ரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க வேண்டும்; இறந்த தொழி லாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு சீனியாரிட்டி பார்க்காமல் உடனடியாக கருணை அடிப்படையில் பணி தர வேண்டும்; சிகிச்சை பெறும் ஊழி யர்களுக்கு சிறப்பு விடுமுறை அளித்து  முழு ஊதியம் தருவதோடு, மருத்து வச் செலவையும் ஏற்க வேண்டும்; சிகிச்சை பெறும் ஊழியர்கள் பணிக்கு திரும்பியதும் அவர்கள் உடல் நிலைக்கு ஏற்ற பணி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

துறைச் செயலர் வாக்குறுதி

இப்போராட்டத்தையடுத்து பணி மனைக்கு வந்த போக்குவரத்துத் துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன், உயிரி ழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். விபத்துக்கான காரணம் குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும். மாநகர பணிமனை கட்ட மைப்புகள் மறு சீரமைப்பு செய்யப் படும்.  ஊழியர்களின் ஓய்வறை உரிய பாதுகாப்புடன் கட்டப்படும் என்பன உள்ளிட்ட உறுதிகளை அளித்தார். 
 

;