விழுப்புரம்.அக்.11- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி களின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புக ழேந்தியை ஆதரித்து பிரச்சா ரம் செய்த இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, விழுப்புரத்தில் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது,“ கிராம பஞ்சா யத்து தேர்தல் நடத்தாததால் உள்ளாட்சியில் அதிகாரிகள் தாங்கள் நினைத்ததை செய்து வருகின்றனர். குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஏரி-குளம், வரத்து வாய்க் கால் மராமத்து, தூர்வாரும் பணிகள் எனக் கூறி பொதுப் பணித் துறை அதிகாரிகள் மற்றும் அதிமுகவினர் அதற் கான நிதியை கூட்டு கொள்ளை யடிக்கின்றனர்” என்றார். விழுப்புரம் மாவட்டத் தில் நந்தன் கால்வாய் திட் டத்தை நிறைவேற்ற வேண் டும், கரும்பு நிலுவைத் தொகை பாக்கி வழங்க வேண்டும், உள்ளாட்சி தேர் தல் விரைவில் நடத்த வேண் டும் என்றும் அவர் வலி யுறுத்தினார். தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக மத்திய பாஜகவின் கட்டுப் பாட்டில் உள்ளது என்று குற்றம்சாட்டிய அவர், விக் கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என வும் நல்லக்கண்ணு கூறினார். இந்த சந்திப்பின்போது மாவட்டச் செயலாளர் ஏவி.சரவணன், பொருளாளர் ஆர்.கலியமூர்த்தி உடனி ருந்தனர்.