tamilnadu

img

தூத்துக்குடியில் ரூ.49,000 கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை

சென்னை, பிப். 14- தென்மாவட்டங்களில் பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் குவைத் நாட்டை சேர்ந்த அல் கெப்லா அல் வட்யா குழுமம், 49ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடி அருகே பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலியம் வேதிப்பொருட்கள் தயாரிப்பு வளாகத்தை அமைக்க உள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகஅரசின் 2020-21ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத்திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 966 ஏக்கர் பரப்பில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

கடல்நீர் சுத்திகரிப்பு

புதுமை முயற்சிகளை ஊக்குவிக்க ஸ்ரீபெரும்புதூர், ஒசூரில் தொழில் புதுமை முயற்சி மையம் நிறுவப்படும். தூத்துக்குடி தொழிற்பூங்கா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழில்நிறுவனங்களின் தேவையை நிறைவு செய்ய நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலை 634 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் என்றும் அவர் கூறினார்.

தொழிற்பேட்டை

புதியதொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் மூலதன மானியததை 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் வட்டம், உமையாள்புரம், புத்திர கவுண்டன் பாளையம் கிராமங்களில் 4.50 கோடி ரூபாய் செலவில்புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்படும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.

 

;