tamilnadu

img

துப்பாக்கிகளோடு பகிரங்கமாக வலம் வந்த பாஜகவினர்... தில்லியில் கலவரம் தூண்டியது ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்களே- 8

“காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதியும் போது நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதனை பதிவு செய்ய விரும்பவில்லை” என மும்தாஜ் தெரிவித்தார். “அவர்கள் எப்படி அது இருக்க வேண்டும் என விரும்பினார்களோ அந்த அடிப்படையில் பதிவு செய்தனர்” என்கிறார் மும்தாஜ்.

ஜூலை மாதம் 2 ஆம் தேதி தில்லி காவல்துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவத்சவா அவர்களுக்கு மற்றொரு புகாரை, தன்னுடைய கடையை யார் யாரெல்லாம் எரித்தனர் என்றும் பிஷித் மீதும் மற்றும் காவல் துறையினர் மீதும் புகார் கொடுத்தார்.
அவர் காவல் ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில் , பிப் 23 இரவு தனது கடை தீ வைத்து கொளுத்தப்பட்ட பிறகு அவர் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது,  மோகன் சிங் பிஷித் அவருடைய கூட்டாளிகளுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததாக தெரிவிக்கிறார். மோகன் சிங் பிசித் “இந்த முஸ்லீம்களை கண்டுபிடித்து அவர்களை கொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றும், முஸ்லீம்களின் வீடுகளையும் கார்களையும் கொளுத்துமாறும், அவர்களின் கடைகளை  சூறையாடிவிட்டு கொளுத்துமாறும் கூறி தூண்டிவிட்டதாக மும்தாஜ் உறுதிப்படுத்துகிறார். மும்தாஜ் மேலும் எழுதுகிறார்: பிஷித் இதனை தெரிவித்துவிட்டு, இனி தலைமுறைகளுக்கு அவர்களுக்கு நினைவிருக்கும் வகையில் இது நிச்சயம் இருக்க வேண்டும் எனவும், இனி அவர்களுக்கு சிஏஏவுக்கு எதிராக போராட தைரியம் வரக் கூடாது, அவர்கள் நம்மை பார்த்து தலையைக் கூட உயர்த்தக்கூடாது என்றும் வெறியூட்டினார்.”

பிப்ரவரி 25தேதி காலையில் மும்தாஜ் மற்றும் அந்த பகுதி இதர முஸ்லீம்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்து சேதங்கள் எந்தளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிட கிளம்பினர் என கமிஷனருக்கு தனது கடிதத்தில் மும்தாஜ் குறிப்பிடுகிறார். இவர்களைக் கண்ட இந்து கும்பல் ஒன்றுஅவர்களை நோக்கி விரட்டி வந்து தாக்க முற்பட்டது. மும்தாஜ் உள்ளிட்டோர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சந்துகளில் புகுந்து ஓடினர். அப்போது  கும்பலிலிருந்து ஒருவன், “ இந்த முறை நீங்கள் தப்பிக்கலாம். ஆனால் இன்னும் இரண்டு மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள். உங்களில் ஒருவர் கூட உயிருடன் இருக்கமாட்டீர்கள்” என்று கூச்சல் போட்டதாக தெரிவிக்கிறார்.

சிறிது நேரத்தில் அந்த கும்பல் அந்த சந்திற்கு வந்தடைந்தது. ‘அவர்களுடன் தாரகேஸ்வர் சிங்கும் உடனிருந்தார். சிறிது நேரத்தில் பிஷித்தும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். உடனே கும்பல் “மோகன் பிஷித் ஜிந்தாபாத்” என கோஷமிட்டது.
அப்போது மோகன் பிஷித் அந்த கும்பலிடம், “வந்த வேலையை விரைவாக முடியுங்கள்”என உத்தரவிடுகிறார். “இதற்குப் பிறகும் முஸ்லீம்கள் இந்த பகுதியில் வாழ நினைத்துப் பார்க்கக் கூடாது” என பிஷித் பேசினார். அதன் பிறகு அந்த கும்பல் சந்துகளில் சென்றுபெட்ரோல் குண்டுகளையும் கற்களையும் வீடுகளின் மீது வீசத் தொடங்கியது.’ “நான் பார்த்துக் கொண்டிருந்த போதே மோகன் பிஷித் ஒரு பெட்ரோல் குண்டை எடுத்து என் வீட்டின் முன்னே வீசினார். பக்கத்து வீட்டு மாடியிலிருந்து நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே, பெரும் சத்தத்துடன் அந்த குண்டு வெடித்ததில் அந்த பூட்டு சிதறியது, உடனே அந்த கும்பல் என் வீட்டின் உள்ளே சென்று வீட்டை சூறையாடியது. அது நடந்த பின் மோகன் பிஷித் அந்த இடத்தை விட்டு சென்றார்.என மும்தாஜ் தனது புகாரில் விவரிக்கிறார்.

அந்த கலவரங்களில் தில்லி காவல்துறை மற்றும் பாஜக தலைவர்களின் பங்கு பற்றி சாட்சியமளித்தவர்களில் மும்தாஜூம் ஒருவர் அவர் அதிகாரப் பூர்வமாக புகார் கொடுத்துள்ளார். பிப். 23 அன்று கபில் மிஸ்ரா சிஏஏ எதிர்ப்பு போராட்டக் காரர்களை அச்சுறுத்தி ஜாபராபாத்தில் பேசிய சில மணி நேரத்திற்குள், அந்த பாஜக தலைவர் ஒரு ஆயுதங்தாங்கிய கும்பலை இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ள கார்தம்பரியில் தாக்குதல் நடத்த தூண்டிவிட்டார் என இரண்டு புகார்கள் தில்லி காவல்துறை வசம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவற்றில் ஒரு புகார்-உள்துறை அமைச்சகத்தால் பெறப்பட்டது என்ற முத்திரையுடனும், பிரதம மந்திரி அலுவலகத்திலும், அதேபோன்று தில்லி துணை நிலைய ஆளுநர் அலுவலகத்திலும், தில்லி காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் பெறப்பட்டது- பிப். 24 தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. புகார் தாரர் முகம்மது ராஷ்வி வடகிழக்கு தில்லியின் யமுனா விகார் பகுதியில் வசிப்பவர். தனது புகாரில் எழுதுகிறார். பிப். 23தேதி மதியம் 2 மணிக்கு, கார்தம்பூரி பகுதியில் கபில் மிஸ்ரா ஒரு 25 பேர் கொண்ட கும்பல் முன் தோன்றினார். 

அந்த இடம் சிஏஏவுக்கு எதிராக மற்றொரு உள்ளிருப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த இடம். அந்த போராட்டக் களம் அன்று வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் மக்களை கொண்டிருந்தது. காரணம் உச்சநீதிமன்றம் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை நீர்த்து போகச் செய்யும் தீர்ப்பிற்கு எதிராக தலித் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெற்ற நாளாகும் அது.பாஜகவின் கபில் மிஸ்ராவும் அவர்களது கூட்டாளிகளும், துப்பாக்கிகள், வாள்,  திரிசூலம், மண்வெட்டி, கம்புகள், கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் இதர ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு மதரீதியான மற்றும் சாதியை இழிவு படுத்தும் கோஷங்களை போட்டு கொண்டு சிஏஏ எதிர்ப்பு போராட்ட பந்தலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு கபில் மிஸ்ரா அந்த கூட்டத்தினரிடையே பேசினார். ‘நமது வீட்டு கழிப்பறைகளை சுத்தம் செய்பவர்களை நாம் உயர்ந்த பீடத்தில் அமர்த்த வேண்டுமா?’ உடனே கூட்டம் “நிச்சயமாக கிடையாது” என பதில் கூச்சலிடுகிறது. அதன் பிறகு கபில் மிஸ்ராசொல்கிறார், “இந்த முஸ்லீம்கள் முதலில் சிஏஏயையும் என்.ஆர்சியையும் எதிர்த்தனர். தற்போது அவர்கள் இடஒதுக்கீடு வேண்டி போராடுகிறார்கள். இப்போது நாம் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்” 
என்று தனது கும்பலிடம் வெறியைக் கிளப்புகிறார்.

இந்த பேச்சை கேட்டவுடன், மிஸ்ராவின் கூட்டாளிகள் கார்தம்பரியிலிருந்த (சிஏஏ) போராட்டக்காரர்கள் மீது  கற்களை வீசினர். காவல்துறை இருக்கும் போதே அந்த வழியாக சென்ற கார்களை நிறுத்தினர். அந்த கார்களில் பயணம் செய்தவர்கள் முஸ்லீம்களாகவோ அல்லது தலித்துகளாகவோ இருந்தால் அவர்களை கேவலமாக பேசினர். அவர்களை தேசவிரோதிகள் என்று அழைத்தனர். முல்லாக்கள் என்றும், தலித்துகளுக்கு எதிராக சாதியை இழிவுபடுத்தும் சொற்களையும், பயன்படுத்தினர். தாக்கினர், கார்களை சேதப்படுத்தினர்” - என்று விரிவாக விவரிக்கிறார் முகமது ராஷ்வி.

அதேசமயம், மிஸ்ரா என்ன செய்தார் என்பதையும் ராஷ்வி எழுதுகிறார்:“கபில் மிஸ்ரா ஒரு துப்பாக்கியை தூக்கி காண்பித்துக் கொண்டு, மிகமிக இழிவாக வசைபாடிக் கொண்டே இன்று நாம் அவர்களுக்கு புகட்டப் போகும் பாடத்தில் அவர்களுக்கு எப்படி போராடுவது என்பதே மறந்து விட வேண்டும்.”இப்படித்தான் நடந்தது தில்லி கலவரம். முற்றிலும் தூண்டிவிட்டவர்கள் பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பல்களே!

----முற்றும்-----

;