tamilnadu

img

மோடி அரசின் மோசடித் திட்டங்கள்

பாஜகவும் அதன் கூட்டணியில் இருப்பவர்களும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும் தங்களது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருகின்றன. 5 ஆண்டு கால ஆட்சியில் தாங்கள் செயல்படுத்திய முதன்மையான(?) திட்டங்கள் குறித்து 5000 கோடி ரூபாய்களுக்கும் கூடுதலான தொகையை செலவிட்டதாக தம்பட்டம் அடித்து வருகின்றனர். ஆனால், உண்மை என்ன தெரியுமா? அரசு புள்ளிவிவரங்களே இத்திட்டங்கள் எல்லாம் மோசடித் திட்டங்கள் என்பதனை அம்பலப்படுத்தி வருகின்றன.


பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 


கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு அளிக்கும் திட்டம் என அறிவிக்கப்பட்டது.


பாஜக தம்பட்டம்


• இலவசத் திட்டம்

• 6.23 கோடி இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன


இத்திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்க்கை முறையும், சுகாதாரமும் மேம்பட்டுள்ளது.


உண்மை நிலை


அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரைப் பெற இதனை விநியோகிக்கும் நிறுவனத்திற்கு ரூ.1600/-ஐ பயனாளி செலுத்த வேண்டும். இவ்வாறாக, இத்திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து ஜனவரி 2019 வரை 9968 கோடி ரூபாய் பயனாளிகளால் செலுத்தப்பட்டுள்ளது.


சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அதிகமான தொகையை செலவிட வேண்டியிருப்பதாலும், சிலிண்டரை விநியோகிக்கும் முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாகவும், அரசு சொல்லும் பயனாளிகளில் பலர் மீண்டும் கரியையும்,மரக்கட்டைகளையும், வறட்டியையும் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.


அரசு செய்திருக்க வேண்டியது - சமையல் சிலிண்டரின் விலையே பயனாளிகளாக உள்ள குடும்பங்களுக்குப் பெருஞ்சுமையாக உள்ளது என்கிறபோது, மோடி அரசு சிலிண்டரின் விலையைக் குறைத்து அதன் பயன் இக்குடும்பங்களுக்கு நேரடியாகக் கிடைப்பதை உறுதி செய்திருக்கலாம். அதேபோன்று, எவ்விதக் கட்டணமும் செலுத்தாமல் இணைப்பைப் பெற வழிகோலியிருக்கலாம்.


முத்ரா கடன்கள்


சுயதொழில் செய்ய விரும்புபவர்கள் பலருக்கு எவ்விதமான முன்நிபந்தனைகளும், தணிக்கையும் இன்றி விரைவில் 10 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகையை வங்கிகளும், இதர நிதி நிறுவனங்களும் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக பெரும் எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்திட துவங்கப்பட்ட திட்டம்.


பாஜக அரசு கூறுவது


2015 முதல் மார்ச் 2019 வரை 7.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 16.6 கோடி கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


எழும் கேள்வி


இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அரசியல் நிர்ப்பந்தத்தின் காரணமாக, இலக்குகள் எட்டப்பட்டதாகக் காட்டி தங்களது மேலதிகாரிகளை திருப்திப்படுத்திட வங்கிகள் இத்திட்டத்தின் கீழ் கடன்களை அளித்துள்ளன. உள்ளூர் பாஜக தலைவர்களும் ஆதர

வாளர்களும், இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்றுத் தருவதாகச் சொல்லி மக்களை தங்கள்பால் ஈர்க்கும் வேலையை செய்து வருவதாக சில அறிக்கைகள் கூறுகின்றன. அப்படி

யானால், தங்களது ஆதரவாளர்களுக்கு ஆதாயமளித்திட பாஜகவால் துவக்கப்பட்ட திட்டமா இது?


‘ஸ்கில் இந்தியா’ திட்டம்


ஸ்கில் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ்யோஜனா என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் நோக்கம் தொழிற்சாலைகளின் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியை அளிப்பதாகும்.


மோடி அரசு அவிழ்த்து விடும் புளுகு மூட்டைக்கும், பொய்யான கூற்றுக்களுக்கும் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழும் திட்டம் இது. இத்திட்டம் முதல் கட்டத்திலேயே படுதோல்வியைத் தழுவியது. “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்காமல், தொழிற்சாலைகளின்துறைவாரியான தேவைகளை பூர்த்தி செய்யாமலும், எல்லோரும் வெறும் எண்ணிக்கையை நோக்கியே ஓடிக்கொண்டிருந்தனர்” என இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து பரிசீலிக்க 2016ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சாரதா பிரசாத் கமிட்டி தெரிவித்தது. மேலும்,“தொழிற்சாலைகளின் சரியான திறன் தேவையை பூர்த்தி செய்வது மற்றும் கண்ணியமான ஊதியத்துடனான வேலைவாய்ப்பை இளைஞர்களுக்கு வழங்குவது என்ற இரட்டைநோக்கங்களை பூர்த்தி செய்யாமல் தனியார் நிறுவனங்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் அரசு கஜானாவிலிருந்து 2500 கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது” என இக்கமிட்டி தெரிவித்தது. இத்தகைய அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளிவந்ததும், சம்பந்தப்பட்ட அமைச்சர் பிரதாப் சிங் ரூடி மாற்றப்பட்டு, இத்திட்டம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால்,புதுப்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் திட்டத்தின் கீழ் 2016 முதல் 2020 வரை 1 கோடி இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியை அளித்திட 12,000 கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டபோதும், நிலைமையில் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. 


இத்திட்டம் தொடர்பான அரசின் இணையதளத்திலிருந்து...


குறுகிய கால பயிற்சிக்கு மார்ச் 2019 வரை கிட்டத்தட்ட 28 லட்சம் இளைஞர்கள் சேர்ந்தனர்


இத்திட்டத்தின் மற்றொரு பகுதியான முன் கற்றல் அங்கீகாரம் என்ற திட்டத்தின் கீழ் ஏற்கனவே வேலையில் உள்ள 16 லட்சம் வழங்கப்பட்டது.


உண்மை நிலை


இவர்களில் வெறும் 38 சதவீதத்தினருக்கு மட்டும்தான் பயிற்சிக்குப் பின் வேலை கிடைத்துள்ளது. அதுவும், அவர்களுக்கு எங்கு வேலை கிடைத்தது, பயிற்சியின் வாயிலாக அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற

திறனுக்கு தொடர்புடைய வேலை அவர்களுக்கு கிடைத்ததா என்பது குறித்து எந்த விவரங்களும் சரி பார்க்கப்படாமல் வெறும் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


வெறும் 10 லட்சம் பேர் மட்டுமே சான்றிதழை பெற முடிந்தது. வெறுமனே எண்ணிக்கையை உயர்த்திக் காட்டுவதற்காக, பெட்ரோல் நிலையங்கள்,

வீடுகளில் வேலை செய்பவர்கள் என எல்லா விதமான தொழிலாளர்களும் ஒரு சில நாட்களுக்கு பயிற்சியில் கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.


அடுத்த ஆண்டிற்குள் 1 கோடி பேர் என்ற இலக்கு எட்டப்படுவது தொலை தூர கனவாகவேஉள்ளது. தொழிற்சாலைகளிலும், சேவைத் துறையிலும் வேலைவாய்ப்புகள் இல்லாதபோது, சுயதொழிலுக்கான வாய்ப்பும் இல்லாமல் உள்ள சூழலில், மக்களுக்கு பயிற்சியைமட்டும் அளிப்பதாக கூறுவது என்பது அவர்களை முட்டாளாக்கும் செயலாகும்.


பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா


மோடி அரசின் மிக அபாயகரமான, மோசடியான திட்டங்களில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் ஒன்றாகும்.  


அரசு அடிக்கும் தம்பட்டம்


மோசமான வானிலை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் தங்களது பயிர்களை இழக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடாகஅளிப்பதற்கான திட்டம் இது


காப்பீட்டு நிறுவனத்திற்கு விவசாயிகள்ஒரு தொகையையும், அதை விடகூடுதலான தொரு தொகையைஅரசும் செலுத்துவார்கள். இயற்கை பேரிடர் ஏற்படும்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டுத் தொகையை அந்நிறுவனம் அளித்திடும். 


உண்மை நிலை


இதற்கு முன்பு இருந்ததைப் போல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாக இழப்பீட்டுத் தொகையை அளிப்பதற்கு பதிலாக, காப்பீட்டுநிறுவனங்கள் லாபமீட்டுவதற்கான வாய்ப்பாக கார்ப்பரேட் ஆதரவு மோடி அரசு இத்திட்டத்தை அமைத்துள்ளது.


2016ம் ஆண்டு முதல், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரூ.8719 கோடியை விவசாயிகளும், ரூ.41,317 கோடியை மத்திய விவசாயிகளும், ரூ.41,317 கோடியை மத்திய மொத்தம் ரூ.50.036 கோடி காப்பீட்டு

நிறுவனங்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.  காப்பீட்டு நிறுவனங்களால்விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.35,949 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

அதுவும் கூட இழப்பு ஏற்பட்டு பல மாதங்கள் கழித்தே அளிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில், இக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.14,088 கோடி லாபத்தை காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டியுள்ளன.


இத்தகைய மோசமான நடைமுறையின் காரணமாக, இத்திட்டத்தில் சேரும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வறட்சி நிவாரணத்திற்காக மோடி அரசிடம் சிறப்புசலுகைகளை மாநில அரசுகள் கோரி வருகின்றன.


பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா


நாட்டு மக்களில் ஏராளமான பேருக்கு தொகை எதுவும் இருப்பில் இல்லாமல் வங்கிக் கணக்கை துவக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று சொல்லப்பட்டது.  


அரசின் தம்பட்டம்


ரூ.93,567 கோடி இருப்புடன் 34.87 கோடிஜன் தன் கணக்குகள் உள்ளன பிஎன்ஜேடிஒய் இணையதளம்

தெரிவிக்கிறது.


எந்த தொகையும் வங்கி சேமிப்புகணக்கில் இல்லாது கிட்டத்தட்ட 5.2 கோடி கணக்குகள் இருப்பதாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாநிலங்களவையில் அரசு தெரிவித்தது.


வங்கிக் கணக்கில் இருப்பில் உள்ள தொகையை விட கூடுதலான தொகையை எடுத்துக் கொள்ளும்வசதியும், காப்பீட்டு தொகையும்

இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் எனஉத்தரவாதம் அளிக்கப்பட்டது. 



உண்மை நிலை

அரசு புள்ளிவிவரப்படி பார்த்தால் அரசு புள்ளி விவரப்படி பார்த்தால் இவர்களில் எவ்வளவு பேருக்கு வேறு சராசரியாக ரூ.2683 உள்ளது.


இவர்களில் எவ்வளவு பேருக்கு வேறு வங்கிகளில் சேமிப்புக் கணக்குகள் உள்ளன என்பது குறித்த விவரங்கள் அரசால் வெளியிடப்படவில்லை. நேரடிபணப்பட்டுவாடா மூலம் செலுத்தப்படும்தொகை குறித்த பல்வேறு அறிக்கைகளைப் பார்க்கும்போது, ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருப்போரில் கணிசமான பேருக்கு வேறு வங்கிகளில் கணக்கு இருக்கக் கூடம் எனத் தெரிகிறது.


எனத் தெரிகிறது. ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையில், 1சதவீதத்திற்கும்குறைவானவர்களே தங்களது வங்கிக் கணக்கில் இருப்பில் உள்ள தொகையை

விட கூடுதலான தொகையை எடுத்துக் கொள்ளும் வசதியைப் பயன்படுத்தியுள்ளனர்.


2018 ஜனவரி வரை, 13.62 கோடி ரூபாய்கள் ஆயுள் காப்பீட்டு உரிமத் தொகையாக 4543 பேருக்கும், 23.40 கோடி ரூபாய்கள் விபத்துக் காப்பீட்டுத் தொகையாக 2340

பேருக்கும் அளிக்கப்பட்டுள்ளன.


மொத்த எண்ணிக்கையில் பார்க்கும் போது இவ்வசதிகளால் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை சொற்பமான ஒன்றேயாகும்.  


ஸ்வச் பாரத் மிஷன்


பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்த திட்டம் இது. மொத்தமுள்ள 32 மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்களில் 30ல் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதுநடைமுறையில் இல்லை என அரசு சொல்கிறது. ஆனால், இத்தகைய நடைமுறை இன்னமும் பல மாநிலங்களில் இருப்பதாக பல்வேறு அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இதுஇப்புள்ளிவிவரங்களின் உண்மைத்தன்மை குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது. இதனிடையே, இத்திட்டத்திற்கென செய்யப்படும் ஒதுக்கீடு தொடர்ச்சியாக வெட்டப்பட்டு வருகிறது.இதனிடையே, இத்திட்டம் கட்டாயப்படுத்தி அமலாக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பவர்களுக்கு உணவளிக்க மறுப்பதும், பறக்கும் காமிராக்களைக் கூட பயன்படுத்தி அவர்களை புகைப்படம் எடுப்பதும் நடைபெறுகிறது.  


மனித மலத்தை மனிதனே அகற்றுவது என்ற சாபக்கேடு இன்னமும் தொடர்கிறது. இது குறித்து எந்த விவாதமும் நடைபெறாமல் இருப்பதோடு, இது தொடர்பான பிரச்சனைகளை மோடி அரசு முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறது. இந்நடைமுறை தடைசெய்யப்பட்டுள்ளபோதும், 2017ம் ஆண்டிலிருந்து இதில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் - அநேகமாக அனைவரும் தலித்துகள் - தங்களது உயிரை இழந்துள்ளனர். இத்தகையகொடூரமான நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இப்பணியில் ஈடுபடுபவர்களின் மறுவாழ்விற்கு சொற்பமான தொகையை ஒதுக்கீடு செய்தும், இப்பணி தொடர்பான தொழில்நுட்பத்தில் எந்த முதலீடும் செய்யாதும் மோடி அரசு வெற்று வார்த்தைகளையே வெளிப்படுத்தி வருகிறது. 


நகர்ப்புறங்களில் மலையெனக் குவிந்துள்ள குப்பைகள்


கிட்டத்தட்ட 40 கோடி மக்களுக்கு வசிப்பிடமாக உள்ள நகர்ப்புறப் பகுதிகளில், அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிடங்களை கட்டுவதற்கான கவனம் செலுத்தப்படாதது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நகரங்களிலும், மாநகரங்களிலும் நாளொன்றுக்கு 6.2 கோடி டன் நகராட்சி திடக் கழிவுகள் சேர்கின்றன. இதில், வெறும் 4.3 கோடிடன்களே சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகளில் 1.2 கோடி டன் கழிவுகள் சுத்திகரிப்பு செய்யப்படுகின்றன. மீதி 3.1 கோடி டன் கழிவுகள் திறந்தவெளிகளில்கொட்டி குவிக்கப்படுகின்றன. இக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்யும் பணியை தனியார்நிறுவனங்களிடம் ஒப்பந்தமாக அளிப்பதற்கான திட்டம் தவிர வேறு எந்த திட்டமும் மோடிஅரசிடம் இல்லை.வேலைவாய்ப்புகளுக்கு உத்தரவாதம், சுகாதாரம், கல்வி, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து போன்றவற்றை அளிப்பதற்காக செயல்படுத்தப்பட்ட ஐசிடிஎஸ், சத்துணவு, மகாத்மாகாந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், தேசிய சுகாதார திட்டம் போன்றபல்வேறு திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இவையே ஐந்தாண்டு கால மோடி அரசு மக்களுக்கு அளித்த பரிசுகள் ஆகும்.


சிபிஐ(எம்) மத்தியக்குழு வெளியிட்டுள்ள 

தேர்தல் பிரச்சார ஆவணத்திலிருந்து... ராகினி













;