tamilnadu

img

ஆசியாவின் ‘பழமையான ஜனநாயகம்’ எதிர்கொள்ளும் சவால்கள் - என்.குணசேகரன்,சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்

அண்டை நாடான இலங்கையில் நடை பெற்றுள்ள அரசியல் மாற்றங்கள் இந்தியா விலும், ஆசியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அண்டை நாடுகளோடு நல்லுறவும், பரஸ்பர பொருளாதார, பண்பாட்டு உறவுகளும் வலுப்படு வது இந்தியாவின் நலனுக்கு உகந்தது. அதேபோன்று, தென்கிழக்கு நாடுகளில் முக்கிய நாடான இலங்கையுடன், இதர நாடுகள் நல்லுறவு கொள்வதும் அவசியமானது.  ஆனால், உள்நாட்டில் மனித உரிமை மீறல்கள், இனப் பாகுபாட்டு அணுகுமுறைகள் நீடிப்பது, ஆசிய நாடுகளின் அமைதிக்கும் நல்லுறவுக்கும் உகந்தது அல்ல. அது மட்டுமல்லாது,  ஏகாதிபத்தியங்கள் சுயலாபம் பெறுவதற்கும் வாய்ப்புக்களை அது உருவாக்கிடும்.

எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு இலங்கையின் எதிர்கால அரசியல் பயணம் குறித்து, பலரும் கவலை கொள்வது இயல்பானதே. இலங்கையில் நடந்து முடிந்துள்ள தேர்தலில் மக்கள் வாக்களித்த விதம் குறித்து பல கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. இன அடிப்படையில் பிளவுபட்டு மக்கள் வாக்களித்ததாகவும், இது பல விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பேசப்படு கிறது.

தேர்தல் பிரச்சாரம்

தற்போது குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவிற்கு 52.25 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா  41.99 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே பெரும்பான்மை சிங்கள - பௌத்தர்கள் வாழும் பகுதிகளில் அதிக வாக்குகள் பெற்றுள் ளார். தமிழர்களும், இஸ்லாமியர்களும் வாழும் வடக்கு,  கிழக்கு பிரதேசங்களில் அவரால் குறைவான வாக்குகளே பெற முடிந்துள்ளது. அந்த இடங்களில் சஜித் பிரேமதாசா அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார். இவ்வாறு இன அடிப் படையில் பிரிந்து மக்கள் வாக்களித்தது இலங்கையின் எதிர்காலம் பற்றி அக்கறை கொண்டோருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் முன்வைக்கப்பட்ட பிரச்ச னைகளும், பிரச்சாரத்தின் தன்மையும் இதில் முக்கிய பங்கு வகித்தன.

தேர்தல் பிரச்சாரம் அடிப்படையான மக்கள் வாழ்வா தாரப் பிரச்சனைகள் மீது பெருமளவுக்கு நடைபெற வில்லை. தேர்தலுக்கு, ஏழு மாதங்களுக்கு முன்னதாக ஈஸ்டர் பண்டிகையின் போது சிறுபான்மையினர் மீது நடத் தப்பட்ட குண்டு வெடிப்பு காரணமாக 250 உயிர்கள் பலியா னது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பயங்கர வாதம் முக்கிய பிரச்சனையாக எழுந்த சூழலில் கோத்தபய ராஜபக்சே தனக்கு சாதகமாக அதனை பயன்படுத்திக் கொண்டார். பயங்கரவாதத்தை அழிப்பதில் அவர்தான் திற மையானவர் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. இதற்குப் பின்னணியாக 2009ல் நடந்த உள்நாட்டுப் போரில் விடு தலைப் புலிகள் அழிக்கப்பட்டதும், அப்பாவித் தமிழர்கள் பலியாக்கப்பட்டதும் முன்னிறுத்தப்பட்டன. அன்று இராணுவச் செயலாளராக இருந்து அந்தப் போரை நடத்திய கோத்தபய ராஜபக்சேவே தீவிரவாதத்தை அழிக்க வல்லவர் என்ற பிரச்சாரம் சிங்களவர்கள் மத்தியில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. 

மறுபுறம், அவர் தலைமையில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலின் துயர வரலாற்றை தமிழக மக்கள் மறந்திடவில்லை.  கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக, தமி ழர்களும், இஸ்லாமியர்களும் வாக்களித்தனர். மாறாக, சஜித் பிரேமதாசா தமிழர் நலன் குறித்துப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஆனால், இருவருக்குமே, இலங்கை யின் தற்போதைய அரசியல், சமூகப் பொருளாதார நிலை மைகளை மேம்படுத்தும் குறிப்பிட்ட மாற்றுத் திட்டம் எதுவு மில்லை. எனவே, ஆசியாவின் ‘பழமையான நாடாளுமன்ற ஜனநாயகம்’ கொண்ட நாடாக கருதப்படும் இலங்கையில் தேர்தல்,  அரசியல் சட்ட அடிப்படையில் நடந்தாலும், ஒட்டு மொத்த இலங்கை மக்களின் முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சி நிரலை இரு தரப்பினரும் முன்வைக்காத நிலை யில் தான் தேர்தல் நடைபெற்றது.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக பல கட்சிகள் அமைப்புகள், பிரமுகர்கள், அறிவுஜீவிகள் கலைஞர்கள் உள்ளடங்கிய 28 அமைப்புக்கள் கூட்டணி அமைத்து தேர்த லில் வேட்பாளரை முன்னிறுத்தின. ஜனதா விமுக்கி பெரமுனா (ஜே.வி.பி.) சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். இந்த அணி முக்கிய இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக மக்க ளின் வாழ்வாதாரம், பொருளாதார நிலை பற்றியெல்லாம், ஓரளவு மாற்று கண்ணோட்டத்துடன் பிரச்சாரம் மேற்கொண் டாலும் அது எடுபடவில்லை. கடந்த காலத்தில் ஜே.வி.பி. தமிழர் நலனுக்கு எதிரானது என்ற கறையும் அகல வில்லை. இந்த அணி பெரிய அளவில் வாக்குகளை பெற வில்லை என்றாலும், இலங்கை அரசியலில் இரண்டு பெரிய முதலாளித்துவ அணிகளுக்கு மாற்றாக இடதுசாரிகள் மீண்டும் முன்னேற இடம் உள்ளது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சனைகள்

தேர்தல் இன அடிப்படையில் பிளவினை ஏற்படுத்தி யுள்ளது என்பதை மறுத்திடும் வகையில் சில வரவேற் கத்தக்க கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. தமிழ் தேசிய கூட்டணியின் மூத்த தலைவரான சம்பந்தம் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.

“கோத்தபயவும், சாஜித் பிரேதாசாவும் சிங்கள - பௌத்தப் பிரிவைச் சார்ந்தவர்கள். பொருளாதாரப் பிரச்ச னையில் இருவருமே ஒரு பக்கத்தில் தான் உள்ளனர், எனினும், பிரச்சாரத்தில் சிறுபான்மையினர் பிரச்சனை களை, சஜீத் முன்னுக்குக் கொண்டு வந்தார்....” 

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கோத்தபயவும் கூட, “எனக்கு வாக்களித்திருந்தாலும், வாக்களிக்கவில்லை என்றாலும் மதம், இனம் வேறுபாடின்றி அனைத்து மக்களுக்குமான குடியரசுத் தலைவராக செயல்படுவேன்” என்று கூறியுள்ளார். எனினும் வெறும் சொற்களை விட, செயல்களே தீர்மானிப்பவை. கோத்தபய ராஜபக்சே, நீண்ட காலமாக தீர்க்கப்படாத தமிழர் பிரச்சனைகளைப் தீர்ப்ப தற்கு முயற்சிக்க வேண்டும். இன, மொழி, சமத்துவம் நிலவும் இலங்கை தான்  எதிர்கால நலனை பாதுகாக்கும். 

இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானம் கீழ்க்கண்டவற்றை சுட்டிக் காட்டுகிறது.

“தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் முழு வதையும் அம்மக்களுக்கு வழங்குவது, நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்வது, தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிலிருந்து இலங்கை ராணுவத்தை வாபஸ் பெறுவது, காணாமல் போனவர்களை கண்டுபிடித்து ஒப்படைப்பது, தமிழர் பிரதே சங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதை நிறுத்துவது, அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது, 2009ல் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச மனித உரிமை நிபுணர்க ளையும் கொண்ட விசாரணைக்குழு அமைத்து விசாரித்து தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற் கொள்வது, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்குவது, தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களது வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவதன் மூலமே புதிய அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்க முடியும்.”

கடனாளி நாடாக இலங்கை

தற்போது மிகப் பெரும் கடனாளி நாடாக இலங்கை உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 83 சதவிகிதம் அளவிற்கு கடன் உள்ளது. சீனாவிடம் 15 சதவிகிதம் அளவில் கடன் உள்ளது. ஆனாலும் சீனா தொடர்ந்து உள் நாட்டு பொதுத்துறை வளர்ச்சிக்கு கடனளித்து வருகிறது. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்டு பல வங்கிக ளில் கடன் பெற்று கடன் சுமையில் இலங்கை தத்தளித்து வரு கிறது. பல பத்தாண்டுகளுக்கு முன்பு சுகாதாரம், கல்வியில் ஆசியாவிலேயே முதன்மை வரிசையில் இருந்த இலங்கை இன்று பின்தங்கி உள்ளது. 

இந்த ஆண்டில் மட்டும் டெங்குக் காய்ச்சல் 78,429 பேரை தாக்கியுள்ளது. தலைநகர் கொழும்புவில் மட்டும் 16,642பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபரங்கள் மனித  வள மேம்பாட்டில் இலங்கை எந்த அளவில் சரிந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.  மறுபுறம், அமெரிக்க அரசு தொடர்ந்து இலங்கை விவ காரங்கள் மீது மேலாதிக்க வெறியுடன் ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியப் பெருங்கடலில் முக்கிய, கேந்திரமான இடத்தில் இலங்கை இருப்பதால், ஆசிய மேலாதிக்கத்திற் கும், சீனாவின் செல்வாக்கை முறியடிக்கவும் இலங்கை யை கருவியாகப் பயன்படுத்தும் திட்டம் நீண்ட காலமாக அமெரிக்க அரசிற்கு உண்டு.

இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே அரசு இலங்கை யின் உழைக்கும் மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகை யிலான பொருளாதார வளர்ச்சிக்கு முயற்சிக்க வேண்டும். இதில் தமிழர், இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்க ளின் நம்பிக்கைக்கு உகந்த அரசாக அது செயல்படுவது முக்கியமானது.




 

;