tamilnadu

img

காஷ்மீருக்கு நம்பிக்கைத் துரோகம், பிற மாநிலங்களுக்கு மிரட்டல் -பிருந்தா காரத்

காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் செயல்பாடு குறித்து இந்திய நாடு முழுவதிலும் மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  தில்லியின் தெருக்களிலே அரசின் செயலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்க ளை இடதுசாரிக் கட்சிகளின் செங்கொடிகள் வழிநடத்தின.  சாலையின் குறுக்கே மோடியைப் புகழ்ந்து தள்ளுப வர்கள் சங் பரிவாரத்தின் காவிக் கொடியை கையிலேந்தி இருந்தனர்.  இந்தியாவின் பிற பகுதிகளில் காஷ்மீர் குறித்து விவாதிப்பதற்கான உரிமை நமக்கு இருக்கிறது என்ற அபசுவரக் குரல் தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஸ்டுடியோ அறைகளில் எதிரொலிக்கிறது.  இத்தகைய உரிமை இல்லாது இருப்போர் காஷ்மீர் மாநில மக்கள் மட்டுமே ஆவர். அவர்களது வீடு உடைக்கப்பட்டு, கூறு போடப் பட்டுள்ளது.  அவர்களது உரிமைகள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டுள்ளன.  தலைவர்கள் சிறை வைக்கப் பட்டுள்ளனர்.  வெளிஉலகத்துடனான அனைத்து தகவல் தொடர்புகளும் வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டுள்ளன.  தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த இன்னமும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.  இத்தகையதொரு சூழ்நிலையில் நீங்கள் எவ்வாறு உணர்வீர்கள்?  விரக்தி, ஏமாற்றம், கோபம், அச்சம், கையறுநிலை, ஆத்திரம் – ஆகிய உணர்ச்சிகளில் எவையேனுமோ அல்லது இவை அனைத்துமோ உங்களது மனதில், சிந்தனையில், உடலில் கொந்தளித்துக் கொண்டிருக்கும்.

ஏதோ ஒரு அபாயம் ஏற்படப் போகிறது என்ற வதந்தி ஆகஸ்ட் மாதம் 4ம் தேதியன்று இரவு பரவியது.  கிட்டத்தட்ட நள்ளிரவில் சிபிஐ(எம்) கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் யூசுப் தாரிகாமியிடம் நான் பேசியபோது அவர் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக தகவல் அளித்துள்ளதாகக் கூறினார்.  இதர பல அரசியல் தலைவர்களுக்கும் இவ்வாறு தகவல் அளிக்கப்பட்டிருந்தது.  அதன் பின்னர், அம்மாநி லத்துடனான அனைத்து தகவல் தொடர்பு இணைப்புக ளும் மத்திய அரசால் துண்டிக்கப்பட்டதால் அவரை தொடர்பு கொள்ள எந்த வழியும் இருக்கவில்லை.

இது ஒருங்கிணைப்பல்ல...

காஷ்மீர் மாநிலத்திற்கென தனியான சட்ட விதி களையும், பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் வெளியுறவு நீங்கலாக இதர அனைத்து விஷயங்களிலும் முடிவெடுப்ப தற்கான அதிகாரத்தையும் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு-370 அம்மாநிலத்திற்கு அளித்தது. ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, 40,000த்திற்கும் கூடுதலான ஆயுதப் படையினரை அம்மாநிலத்திற்கு அனுப்பி வைத்து, துப்பாக்கிகளைக் காட்டி, பிரிவு 144ஐ திணித்து காஷ்மீரின் குரல்கள் எழும்பாது அடக்கப்பட்டுள் ளன.  காஷ்மீர் மக்களை இந்தியாவுடன் இணைப்பதே மோடி அரசால் திணிக்கப்பட்டுள்ள சட்டங்களின் நோக்கம் எனச் சொல்லப்படுகிறது.  ஆனால், கட்டாயப்படுத்தியும், வற்புறுத்தியும் இந்த நோக்கங்களை ஈடேறச் செய்ய இயலாது. இதற்குப் பெயர் ஒருங்கிணைப்பல்ல, ஆக்கிர மிப்பாகும்.

ஜம்மு- காஷ்மீரில் வசித்து பின்னர் அங்கிருந்து வெளியேறியவர்களின் வலைப்பதிவுகளும், செய்திக ளும் அங்கு பெருமளவிலான எண்ணிக்கையில் ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதன் தாக்கத்தைப் பற்றிய சுருக்கமான தகவலை அளிக்கின் றன. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடக் கூலிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளபோதும் வெளியே செல்வதற்கான இசைவுச் சீட்டுகள் இல்லாத எவரையும் நடமாட அனுமதிக்கக் கூடாது என்ற கண்டிப் பான உத்தரவு பாதுகாப்பு படையினருக்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.  இத்தகைய இசைவுச் சீட்டுகள் எங்குமே கிடைப்பது மில்லை.  இதன் காரணமாக 22 வயது இளைஞன் உரிய நேரத்திற்குள் மருத்துவமனைக்கு சென்று சேர இயலாது போனதால் உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது.  

பாலஸ்தீனமா? சைகோனா?...

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்குள் உள்ள பாலஸ்தீனத் தைப் போன்று காஷ்மீரை நாம் மாற்ற விரும்புகிறோமா?  அல்லது 1960களில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த தெற்கு வியத்நாமின் சைகோன் நகராக மாற்ற விரும்புகிறோமா?  தனது குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பாதையில் பாஜக-ஆர்எஸ்எஸ் அரசு செய்திருக்கும் காரியத்தின் விளைவு களைப் பற்றி எண்ணிப் பாருங்கள். தான் மேற்கொள்ளவிருக்கும் இத்தகைய நடவடிக்கைக் கான தயாரிப்பாக கடந்த வாரங்களில் மத்திய அரசால் அனுப்பப்பட்ட 40,000க்கும் கூடுதலான ராணுவத்தினர் ஜம்மு - காஷ்மீரில் உள்ளனர்.

அரசின் இச்செயல் கூட்டாட்சி கோட்பாடு மற்றும் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றின் மீது விடுக்கப்பட்டுள்ள அப்பட்டமான தாக்குதலாகும்.  ஒரு மாநிலத்தை பிரித்திருக்கிறார்கள்.  அதுவும் அம்மாநி லத்தின் மக்களின் கருத்துக்களைப் பெறாமலேயே இது நிகழ்த்தப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இப்படி நடை பெற்றதில்லை.மாறுபட்ட கருத்துகளுக்கு இடையே ஆண்டுக் கணக்கில் பேச்சுவார்த்தைகள், போராட்ட இயக்கங்கள் மற்றும் விவாதங்கள் நடத்தப்பட்ட பின்னரே, ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.உத்தரப்பிரதேசத்திலிருந்து உத்தர்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இன்றைக்கும்கூட தங்களது மாநிலம் பிரிக்கப்பட்டது குறித்து ஆந்திர மக்கள் மனக்கசப்புடன் உள்ளனர்.   ஆனால், அது ஒரு நெடிய நடைமுறையாகும்.  இந்திய தேசம் என்பது சமமான உரிமைகளைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாகும்.  மாநிலம் தொடர்பான எந்தவொரு பிரச்சனை குறித்தும் அம்மாநிலத்தின் சட்ட மன்றமும், அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுமே விவாதிக்க வேண்டும்.  மாநிலங்கள் பிரிக்கப்படுகிறபோது நிகழ்வதைப் போல், மாநிலத்தின் எல்லைகள் ஏதேனும் மாற்றப்படவேண்டுமெனில் அதற்கென பின்பற்றப்பட வேண்டிய அரசியல் சாசனம் சார்ந்த நடைமுறை உள்ளது. ஆனால் இவை எதுவும் ஜம்மு-காஷ்மீர் விஷயத்தில் பின் பற்றப்படவில்லை. 

இரண்டாம் தர குடிமக்களா?

ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களின் மாநில அளவி லான உரிமைகளை பறித்துக் கொள்ளலாம் என்பதற்கு இரண்டாம் தர குடிமக்களா அவர்கள்?  லடாக் மக்க ளுக்கு ஏன் அவர்களது சொந்த பிரதிநிதிகள் மறுக்கப்பட வேண்டும்?  மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் முனிசிபா லிட்டியாகத் தற்போது அந்தப் பகுதி மாற்றப்பட்டுள்ளது. இங்கு இவ்வாறு நிகழுமெனில், வேறு எந்தவொரு மாநி லத்திற்கும் இது நிகழாது என்பதற்கு எந்தவொரு உத்தர வாதமுமில்லை. அரசியல் சாசனத்தின் பிரிவு 370 பற்றி வேண்டுமென்றே ஏராளமான குழப்பங்கள் ஏற்படுத் தப்பட்டு வருகின்றன.  1947ல் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று இந்திய நாடு விடுதலை பெற்றபோது, காஷ்மீர் இந்தியா வின் ஒரு பகுதியாக இருக்கவில்லை.  மகாராஜா ஹரிசிங்கின் ஆட்சியின் கீழ் தனிநாடாக விளங்கியது.  இஸ்லாமியர்க ளை பெரும் எண்ணிக்கையில் கொண்டிருந்த நாட்டை இந்து மன்னர் ஒருவர் ஆட்சி செய்து வந்ததற்கு இது ஓர் உதாரணமாகும். இந்தியாவுடன் சேராது தனியாக இருந்திடவே மன்னர் விரும்பியபோதும், அந்நாட்டு மக்கள் – குறிப்பாக இஸ்லாமியர்கள் ஷேக் அப்துல்லா வால் வழிநடத்தப்பட்ட தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை மையில், இந்தியாவுடன் இணைந்திடவே விருப்பம் கொண்டிருந்தனர். 

ஆக்கிரமிப்பாளர்களை காஷ்மீர் மக்களே விரட்டினர்

பாகிஸ்தானின் ராணுவத்தின் துணையோடு ஆக்கி ரமிப்பாளர்கள் காஷ்மீரின் மீது தாக்குதல் நடத்தி, அதைக் கைப்பற்றி, ஸ்ரீநகரை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டபோது, நாடக பாணியில் இப்பிரச்சனையில் முடிவெடுக்கப்பட் டது.  ஆக்கிரமிப்பு செய்ய வந்தவர்களுடன் காஷ்மீர் பள்ளத் தாக்கில் வசித்து வந்த இஸ்லாமிய மக்களே போர் புரிந்து அவர்களை விரட்டினர்.  அதன் பின்னரே இந்திய ராணு வத்தின் படைகள் அங்கு வான்வழியாக அனுப்பி வைக்கப் பட்டன. ஆக்கிரமிப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னரே இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் மகாராஜா கையெழுத்திட்டார்.  அரசியல் சாசனத்தின் பிரிவு 370ன் கீழ் மாநிலத்திற்கான சுயஆட்சி உரிமை இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தது.  தற்போது இந்த உத்தர வாதத்திற்குதான் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.   தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி மற்றும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜ்ஜாத் லோனே ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

371 வது சட்டப்பிரிவும்  சிறப்பு அந்தஸ்து மாநிலங்களும்

சிறப்பு சலுகை அல்லது உரிமைகள் இருக்கும் மாநிலம் காஷ்மீர் மாநிலம் மட்டுமல்ல.  இந்திய அரசியல் சாசனத்தின் அட்டவணை ஐந்து மற்றும் ஆறின் கீழ் தங்களது நிலம் மற்றும் வனத்தின் மீது அரசியல் சாசன உரிமைகள் ஆதிவாசி மக்களுக்கு உள்ளன.  இத்தகைய பகுதிகளில் ஆதிவாசி மக்களுக்கு சொந்தமாக உள்ள இடங்களை வேறு யாரும் வாங்கிட இயலாது.   பல்வேறு மாநிலங்களுக்கான பல சிறப்பு சட்டப்பிரிவுகளைக் கொண்டதாகவே சட்டப்பிரிவு 371 அமைந்துள்ளது.  இமாச்சலப் பிரதேசத்தில் நிரந்தரக் குடியிருப்பாகக் கொண்டிராத யாரும் அங்கு நிலத்தை விலைக்கு வாங்கிட இயலாது.  சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மேகாலயா ஆகியவற்றில் அங்கு நிரந்தரமாகக் குடியிருப்பவர்களுக்கு என பல்வேறு வடிவங்களிலான சிறப்பு உரிமைகள் உள்ளன.  மணிப்பூரில் அம்மாநிலத்திற்குள் பயணித்திட உள்ளூர் பயண பர்மிட் பெற வேண்டும்.  சிறப்பு சலுகை அல்லது உரிமைகள் இருக்கும் மாநிலம் காஷ்மீர் மாநிலம் மட்டுமல்ல.  இந்திய அரசியல் சாசனத்தின் அட்டவணை ஐந்து மற்றும் ஆறின் கீழ் தங்களது நிலம் மற்றும் வனத்தின் மீது அரசியல் சாசன உரிமைகள் ஆதிவாசி மக்களுக்கு உள்ளன.  இத்தகைய பகுதிகளில் ஆதிவாசி மக்களுக்கு சொந்தமாக உள்ள இடங்களை வேறு யாரும் வாங்கிட இயலாது.   பல்வேறு மாநிலங்களுக்கான பல சிறப்பு சட்டப்பிரிவுகளைக் கொண்டதாகவே சட்டப்பிரிவு 371 அமைந்துள்ளது.  இமாச்சலப் பிரதேசத்தில் நிரந்தரக் குடியிருப்பாகக் கொண்டிராத யாரும் அங்கு நிலத்தை விலைக்கு வாங்கிட இயலாது.  சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மேகாலயா ஆகியவற்றில் அங்கு நிரந்தரமாகக் குடியிருப்பவர்களுக்கு என பல்வேறு வடிவங்களிலான சிறப்பு உரிமைகள் உள்ளன.  மணிப்பூரில் அம்மாநிலத்திற்குள் பயணித்திட உள்ளூர் பயண பர்மிட் பெற வேண்டும்.  

இத்தகைய நடைமுறைகள் ஏன் தேவைப்படுகின்றன என்பதற்கு வரலாற்றுப்பூர்வமான காரணங்கள் உள்ளன.  இருந்தபோதும், இன்றைக்கும் கூட, தங்களது கலாச்சாரம், மொழி மற்றும் வாழ்வியல் மீது நம்பிக்கை கொண்டுள்ள பல்வேறு பகுதியினர் மத்தியில் இவையெல்லாம் பாதுகாக்கப்படாது,  தற்போது சங் பரிவாரத்தினர் முன் வைக்கும் ஒற்றைக் கலாச்சாரம் போன்றவை வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது என்ற அதிருப்தி நிலவுகிறது.        இந்தியாவின் வேற்றுமை பாதுகாக்கப்படுவதுட னேயே இந்தியாவின் ஒற்றுமை இணைந்துள்ளது என்று கூறி வந்தாலும், இன்றைக்கு இது மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டும்.  ஒற்றையாட்சி வடிவம் ஒரு முறை திணிக்கப்பட்டு விட்டது எனில், அது தனது சொந்த உரிமைகளைக் கொண்ட மாநிலங்களின் கூட்டமைப்பு என்கிற இந்திய கூட்டாட்சியின் வரையறை பலவீனப் பட்டு விடுகிறது. முழுமையான தகவல் தொடர்பு துண்டிப்பு நடவடிக்கை யின் ஒரு பகுதியாக, அங்கு தொலைபேசி சேவை மற்றும் இணையதள இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

நீர்த்துப் போகச் செய்ததும் நிலைகுலையச் செய்ததும்

அரசியல் சாசனத்தின் பிரிவு 370 என்பது காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசு மனப்பூர்வமாக அளித்த உறுதிமொழியாகும்.  ஆண்டுகள் செல்லச் செல்ல, காங்கிரஸ் தலைமையிலான அரசு உட்பட அடுத்தடுத்து வந்த அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட 44 திருத்தங்கள் வாயிலாக சுயஆட்சிக்கான அம்சங்கள் பெருமளவில் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.  அரசியல் சாசனத்தின் பிரிவு 370-ஐ நீர்த்துப் போகச் செய்ததும், ஜனநாயக நடைமுறைகளை நிலை குலைந்து போகச் செய்ததுமே காஷ்மீர் மக்களிடையே அதிருப்தியையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தின.  தனது தீய நோக்கத்தை எட்டிட பாகிஸ்தானால் இவையே பின்னர் மோசமாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. காஷ்மீர் மக்கள் தற்போது தனிமைப்பட்டிருப்பதற்குக் காரணம் சட்டப்பிரிவு 370 அல்ல, மாறாக அது நீர்த்துப் போகச் செய்யப்பட்டதும், சிதைக்கப்பட்டதுமே ஆகும் என்பதை வரலாறு காட்டுகிறது.

அரசின் நடவடிக்கைகள் இந்தியாவிற்கு மற்றொரு மாபெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.  இஸ்லாமியர்கள் செல்வாக்கு பெற்றுள்ள ஓர் மாநிலத்தை தன்னால் சகித்துக் கொள்ள இயலாது என்பதை மத்திய அரசு உல கத்திற்கு பறைசாற்றியுள்ளது. “இரு நாட்டுக் கொள்கை தத்துவத்துடன்“ தனக்கு உள்ள விசுவாசத்தை மாறுபட்ட வகையில் வேறுபட்ட தருணத்தில் நிரூபித்து, மதச்சார்பற்ற இந்தியாவிற்கு பலத்த அடியைக் கொடுத்துள்ளது.  “மனிதாபிமானம், ஜனநாயகம் மற்றும் காஷ்மீரியம்” ஆகிய மூன்று தூண்களின் அடிப்படையிலேயே தனது காஷ் மீரக் கொள்கைகள் இருப்பதாக வாஜ்பாய் கூறினார்.   துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு இந்த மூன்று தூண் களுமே அவரது வாரிசுகள் என்று சொல்லிக் கொள்பவர்க ளால் சீர்குலைக்கப்பட்டுள்ளன. அடித்து நொறுக்கப் பட்டுள்ளன.  

நன்றி : என்.டி. டிவி.காம் 
தமிழில் : ராகினி

 

;