tamilnadu

img

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைக்கவில்லை

சென்னை, ஆக. 31- தொடர் நஷ்டம் மற்றும் வருவாய்  குறைந்ததால் பி.எஸ்.என்.எல். ஊழியர்க ளுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைக்க வில்லை. மேலும் 10 நாட்கள் தாமதமாகும் என அதிகாரி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மோசமான கொள்கை யால் பி.எஸ்.என்.எல். தொடர் நஷ்டத்தால் கடுமையான நிதி நெருக்கடியில் தத்த ளிக்கிறது. தனியார் நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்கத் தேவையான தகவல் தொழில்நுட்பங்களை வழங்காமல் மத்திய  அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தை வஞ்சித்து  வருகிறது. மேலும் தனியார் நிறுவனங்கள்  கொழுக்க பிஎஸ்என்எல் நிறுவனத்தை  முடக்குகிறது. இதனால் வாடிக்கையா ளர்கள் குறைந்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு மாதமும் வருவாய் குறைந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு மாதமும் பி.எஸ்.என்.எல்.  ஊழியர்களுக்கு மாதத்தின் இறுதி வேலை  நாட்களுக்கு முதல் சம்பளம் வழங்கப்படும். அதன்படி வெள்ளியன்று (ஆக.30) ஆகஸ்டு மாதத்துக்கான சம்பளம் போடப்பட்டி ருக்க வேண்டும். சம்பளம் வழங்குவதற்குத் தேவையான வருவாய் இல்லாததால் தாமதம் ஆகியுள்ளது.

தமிழ்நாடு வட்டாரத்தில் 14 ஆயிரம் பேரும், சென்னை தொலைப்பேசி நிறு வனத்தில் 6 ஆயிரம் பேரும் பணிபுரி கிறார்கள். இவர்களுக்குச் சம்பளம் கிடைக்க வில்லை. இந்த வருடத்தில் 3வது முறை யாகச் சம்பளம் தாமதமாக வழங்கப்படு கிறது. ஏற்கனவே பிப்ரவரி, ஜூன் ஆகிய மாதங்களில் சம்பளம் தாமதமானது. அதைத்  தொடர்ந்து ஆகஸ்டு மாத சம்பளமும் இப்போது கிடைக்கவில்லை. மேலும் இந்த மாதத்துக்கான சம்பளம் கிடைப்பதற்கு இன்னும் 10 நாட்கள் ஆகும்  என்று கூறப்படுகிறது. சம்பளம் வழங்கத் தேவையான தொகை வசூல்  ஆன பிறகு தான் ஊழியர்களுக்குப் போட முடியும். அதனால் நிலுவையில் உள்ள பாக்கிகளை வசூல் செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பி.எஸ்.என்.எல். அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பி.எஸ்.என்.எல்.லில் வசூல் பிரிவு மோச மான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நடப்பு பில் தொகை உடனே வந்துவிடுகிறது. பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. அரசின் நிறுவனங்களிடம் இருந்தும் லட்சக்கணக்கில் பணம் பாக்கி உள்ளது. மேலும் வாடிக்கையாளர்களும் படிப்படியாகக் குறைந்து வருவதால் வரு வாய் குறைகிறது. அதனால் பில் பாக்கி  தொகையை வசூலிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களிடம் இருந்து பாக்கியை வசூலித்துத் தான் சம்பளம் பெற  வேண்டிய நிலை உள்ளது. இது தவிர பி.எஸ்.என்.எல். கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வங்கியிடம் கடன் பெறும் முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது.ஆகஸ்டு மாதம் சம்பளம் செப்டம்பர் 10ஆம்  தேதிதான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கி றோம் என்றார் அவர்.