tamilnadu

img

நாங்குநேரி சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சாதனை! - அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து 

நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை உடல்நலம் முழுமையாக குணமடையாத நிலையில், உதவியாளர் துணையுடன் தேர்வை எழுதி, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரியை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இரவு 3 பேர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து அரிவாளால் வெட்டினர். போலீசார் விசாரணையில் சாதிய வன்கொடுமையில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தெரியவந்தது. இந்த தாக்குதலில் படுகாயம் சின்னதுரை நாள் சிகிச்சை பெற்ற நிலையில், 12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வை மருத்துவமனையிலேயே எழுதினார். பின்னர் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை உதவியாளர் துணையுடன் தேர்வை எழுதினார். இந்த நிலையில், பொதுத்தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று அவர் சாதனை படைத்துள்ளார். மேலும், B.Com படிப்பை முடித்து CA ஆக வேண்டும் என்பதே அவரது கனவு என சின்னதுரை தெரிவித்துள்ளார். 
சின்னதுரைக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பதாகவும் உறுதியளித்தார்.
 

;