tamilnadu

img

மத்திய அரசு தொழிற்சாலையில் தமிழில் பேசியதால் கோரிக்கையை புறக்கணித்த பொது மேலாளர் - தொழிற்சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட்டம்

உதகை, ஜூலை 17- குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற் சாலையில்  தொழிற்சங்க கூட்டமைப்பினர்  தமிழ் மொழியில் பேசியதால்   பொது மேலாளர் கோரிக்கைகளை  ஏற்க மறுத் ததை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே மத்திய அரசுக்கு சொந்தமான அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரு வதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில்,  இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகளில் தொழிற்சாலை நிர்வாகம் முன் னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை   வலியுறுத்தி  தொழில் சங்க கூட்டமைப்பினர் பொது மேலாளரிடம் கோரிக் கைகளை விளக்கிப் பேசியுள்ளனர்.அப்போது,  பொது மேலாளர் தொழிற்சங்கத்தினரிடம்  யாரும் தமிழில் பேசக் கூடாது.  

தமிழில் பேசினால் நான் இக்கூட்டத்தை புறக் கணிப்பேன் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிற்சங்கத்தினர்  தமி ழில் பேசக்கூடாது என்று கூறிய பொதுமேலாளரை கண்டித் தும், குடியிருப்பு பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றை தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பொது மேலாளர் பேசிய வார்த்தையை திரும்பப் பெறவிட்டால் அனைத்து கட்சி யினரையும் இணைத்து பெருந்திரள் போராட்டம் நடத்தப் போவதாக தொழிற்சங்க கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர்.

;